Coolie: அஜித் டயலாக்கைப் பேசிய ரஜினி.. அய்யயோ அஜித்தே.. இது என்னங்க செம ட்விஸ்டா இருக்கு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படமான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டு உள்ளது. படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் அஜித்தின் டயலாக் பயன்படுத்தி பேசினார். இதனால் ரசிகர்கள் அரங்கம் அதிர ஆரவாரம் செய்தார்கள்.
இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்னர் 7 மணிக்கு படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படி இருக்கும்போது இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் படக்குழுவினர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சத்யராஜ்: அதாவது" எனக்கும் சத்யராஜுக்கும் கொள்கை ரீதியாக பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் மனதில் தோன்றியதை உடனே வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரைப் போன்றவர்களை நம்பலாம். மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு இருப்பவர்களை தான் நம்ப கூடாது. இந்த படத்தின் நாயகன் என்றாலே அது லோகேஷ் கனகராஜ் தான். அதேபோல் இந்திய சினிமாவிலேயே ஒரே ராக் ஸ்டார் அனிருத் மட்டும் தான்.

அஜித் டயலாக்: லோகேஷ் கனகராஜ் 2 மணி நேரம் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியை உட்கார்ந்து பார்த்தேன் முடியல. படுத்து பார்த்தேன் முடியல. தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் முடியல. இந்தப் படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். எத்தனை நாளைக்குத் தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது என அஜித்துக்கு வெங்கட் பிரபு ஒரு வசனம் எழுதியியிருப்பார். அதற்கேற்ற்படி இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார்" என பேசினார். இதில் எத்தனை நாளைக்குத்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது என்ற வசனம் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் இடம் பெறக்கூடிய, அஜித்தின் பஞ்ச் டயலாக். அஜித்தின் வசனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளதால் அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











