நான் மீசை வச்ச குழந்தையப்பா.. ஜெயிலர் படப்பிடிப்பில் குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ரஜினிகாந்த்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்திடம் ஒரு பெண் குழந்தை ஆட்டோகிராஃப் கேட்க அவருடன் ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

சீக்கிரமே ஜெயிலர் படத்தின் அப்டேட்களை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்தின் ஜெயிலர்

ரஜினிகாந்தின் ஜெயிலர்

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

ஆட்டோகிராஃப் கேட்ட குழந்தை

ஆட்டோகிராஃப் கேட்ட குழந்தை

ஜெயிலர் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில், ரஜினி அங்கிள் ஆட்டோகிராஃப் என ஒரு சிறு பெண் குழந்தை கேட்க, உடனடியாக அந்த குழந்தையிடம் இருந்து நோட்டுப் புத்தகத்தை வாங்கி நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோகிராஃப் போடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

போட்டோவும் எடுத்து மகிழ்ந்தார்

போட்டோவும் எடுத்து மகிழ்ந்தார்

மேலும், வெறும் ஆட்டோகிராஃப் மட்டும் எதுக்கு கண்ணா, வா போட்டோவே எடுத்துக்கலாம் என அருகில் அணைத்துக் கொண்டு தனது பேத்தியை கொஞ்சுவது போல அந்த பெண் குழந்தையுடன் நின்று போட்டோ எடுத்து குழந்தையோடு குழந்தையாகவே மாறி விளையாடி மகிழ்ந்த க்யூட்டான புகைப்படமும் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட ரஜினிகாந்தின் சமீபத்திய படங்கள் சரியாக போகாத நிலையில், ஜெயிலர் படம் பந்தயம் அடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் நிறையவே உள்ளது. பீஸ்ட் படத்தில் நடந்த சொதப்பல் ஜெயிலர் படத்தில் நடந்து விடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இயக்குநர் நெல்சன் இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஜெயிலர் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என தெரிகிறது.

பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச்

பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச்

சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டது தான் மிகப்பெரிய ஹைலைட்டாக மாறியது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலேயே தான் ஒரு கெஸ்ட் ரோலாக கூட வந்து செல்கிறேன் என அவர் சொன்னதற்கு மணிரத்னம் அப்படியெல்லாம் உங்களை பயன்படுத்த மாட்டேன், அப்புறம், உங்க ஃபேன்ஸ் கிட்ட யாரு மாட்டிக்கிட்டு முழுக்கிறது என மணிரத்னம் சொன்னதையும் பகிர்ந்திருந்தார். ரஜினிகாந்த் பேச்சு சோஷியல் மீடியாவில் வேற லெவலில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X