coolie Release: போடு வெடிய.. கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்போடு உருவாகியுள்ள கூலி படம் குறித்த முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ஜெயிலர் படத்திற்கு பிறகு சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கூலி படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. இப்படத்தை காண பட்டாஸோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் இந்தியாவே கொண்டாடும் பண்டிகை தினத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூலி. இப்படத்தின் டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ரஜினி நடனம் ஆடும் வீடியோவும் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், இதனை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ்.

பூஜா ஹெக்டே நடனம்: ஜெயிலர் படத்தில் காவலா பாட்டிற்கு தமன்னா ஆட்டம் போட்டிருப்பார். இப்பாடல் படக்குழு நினைத்தபடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ரசிகர்களையும் தாண்டி திரை பிரபரலங்களும் இப்பாட்டிற்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர். பாட்டும் ஹிட் ஆனதால், அதேபோன்று கூலி படத்திலும் விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாட்டிற்கு நடனம் ஆடியிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் நடனம் ஆடியதற்காக பெரும் தொகையை சம்பளமாக பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டே ஜனநாயகன் படத்தில் படும் பிஸியாக இருக்கிறார். பூஜா ஹெக்டே ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரணோடு சேர்ந்து ஐட்டம் பாட்டிற்கு நடனம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்சியூ: லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூலம் எல்சியூவை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்தார். ஹாலிவுட் படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களை ஒரே படத்தில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தந்தவர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டிற்கு அவெஞ்சர்ஸ் என்றால் தமிழில் விக்ரம், லியோ என குறிப்பிடலாம். இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராகவும் லோகேஷ் கனகராஜ் மாறியுள்ளார். எனவே இவர் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படமும் எல்சியூவில் இணைந்திருக்கிறது. அதேபோன்று கூலி படமும் இணைந்தால் மாஸாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எல்சியூவை ஒன்றிணைக்கும் கரு போதை பொருள் தான். அதை தடுக்க போராடும் குரூப்புகளை இணைப்பது போன்று தான் எல்சியூவும் இருக்கிறது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு: கூலி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் ரூ.120 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கூலி படம் குறித்த அப்டேட் இன்று அறிவிப்பதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டது. அதன்படி கூலி படம் ரிலீஸ் ஆகும் தேதியை அறிவித்துள்ளது. இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் தேதி வெளியாகும் எதிர்பார்த்த நிலையில் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படம் 1000 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு படம் வெளியாவதால் பான் இண்டியா அளவில் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற ஆவல் இப்போதே அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











