Jailer Review:ஜெயிலர் விமர்சனம்.. முதல் பாதியே 100 நாட்கள் ஓடும்.. ப்ளூ சட்டை மாறன் அதகள ட்வீட்

சென்னை: Jailer Review in Tamil [ஜெயிலர் திரைப்பட விமர்சனம்]: ஜெயிலர் படம் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 900 திரைகளில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் உலகளவில் 4000 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் திரையிடப்பட்டுவருகிறது.

Rajinikanth Starrer ‘Jailer’ Movie Review and Ratings in Tamil Blue Sattai Maran Tweet About Jailer Movie

பாஸிட்டிவ் விமர்சனம்: தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் இல்லாததால் வெளிமாநிலத்திலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் அதிகாலையிலேயே ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டனர். படத்தை பார்த்தவர்கள் ஜெயிலரில் நெல்சன் திலீப்குமாரும், ரஜினிகாந்த்தும் கம்பேக் கொடுத்துவிட்டார்கள். இதன் மூலம் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி உணர்த்திவிட்டார் என பதிவிட்டுவருகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனம்: காலையிலிருந்தே படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நெகட்டிவ் விமர்சனங்களும் ஆங்காங்கே வந்துகொண்டுதான் இருக்கின்றன. முதல் பாதி ரொம்பவே ஸ்லோவாக செல்கிறது. டார்க் காமெடி என்கிற பெயரில் நெல்சன் திலீப்குமார் எதையோ செய்திருக்கிறார். தெலுங்கு பட வாடை எல்லாம் அடிக்கிறது என ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு பரப்புகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: இந்தச் சூழலில் சமீப காலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதாவது ஒரு ரசிகர் பழைய ரஜினி படத்துக்கு ஒரு விமர்சனம் கொடுக்கிறார். அந்த விமர்சனத்தில் முதல் பாதி 100 நாட்கள் ஓடும்; இரண்டாம் பாதி 500 நாட்கள் ஓடும் என குறிப்பிடுகிறார்.

Rajinikanth Starrer ‘Jailer’ Movie Review and Ratings in Tamil Blue Sattai Maran Tweet About Jailer Movie

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மாறன், "ஜெயிலரின் முதல் விமர்சனம் வெளியானது. முதல் பாதி 100 நாட்கள். இரண்டாம் பாதி 500 நாட்கள். என்ன ஒரு கணிப்பு. என்ன ஒரு எண்ட்டெர்டெயினர். இதுதான் 70ஸ் கிட் என்பது" என குறிப்பிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் முதலில் படம் பார்த்துவிட்டீர்களா. படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் வையுங்கள். பார்க்காமலேயே எப்படி நீங்கள் விமர்சனம் வைக்கலாம் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

முன்னதாக, ரஜினியை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துவருவதால் அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கணும் என ரஜினி ரசிகர்கள் நேற்று பேசியிருந்தனர். அதனையடுத்து மாறன் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதுமட்டுமின்றி படம் பார்க்க மாயாஜால் திரையரங்குக்கு வருவேன் தைரியம் இருந்தால் வா என ரஜினி ரசிகரிடம் மாறன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X