ஹார்ட் டிஸ்க் கிடைச்சும் சிக்கல் தான்.. ஓடிடிக்கு முன்பே டிவியில் வெளியாகும் லால் சலாம்.. எப்போ தெரியுமா?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம், மிகப்பெரிய தோல்வித்திரைப்படமாக மாறியது. அதற்கு படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது காரணமாக சொல்லப்பட்டது. இப்படம் இதுநாள் வரை ஓடிடியில் வெளியாகாத நிலையில், படம் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா த்ரி படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இதைத்தொடர்ந்து, கௌதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்த லால் சலாம் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விஷ்னு விஷால்,விக்ராந்த் என பலர் நடித்திருந்தனர். இதில். ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

lal salaam rajinikanth aishwarya

தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கடுமையான விமர்னத்தை சந்தித்து, படு தோல்வியடைந்தது. இதுகுறித்து பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் 21 நாள்கள் எடுத்த காட்சிகள் காணாமல் விட்டது என்றும், ஆயிரக்கணக்கான பேரை வைத்து, 10 கேமராக்கள் வைத்துத் கிரிக்கெட் போட்டியை படப்பிடிப்பு செய்திருந்தோம். அந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சிகளை முடியாததால், படத்தை அப்படியே வெளியிட்டுவிட்டோம் அது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறியிருந்தார்.

ஓடிடியில்: இதனால் லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில், தொலைந்து போன ஹார்ட் டிஸ்கில் இருந்து சில காட்சிகளை மீட்டுள்ளோம். இந்த காட்சிகளை உள்ளடக்கிய டைரக்டர்ஸ் கட் ஒன்று ஓடிடியில் வெளியாகும் என்றும், திரையரங்கில் வெளியானதை விட ஓடிடியில் வெளியாகும் பிரதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதையடுத்து,லால் சலாம் படம் 'சன் நெக்ஸ்ட்' ஓடிடி தளத்தில் செப்டம்பர் மாதம் ஸ்ட்ரீமிங் ஆகும் என சொல்லப்பட்டு, ஆனால் படம் வெளியாகவில்லை.

டிவியில்: இந்நிலையில், லால் சலாம், தியேட்டரில் வெளியாக பத்து மாதம் ஆனநிலையில், படம் ஓடிடிக்கு முன்பாகவே டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இப்படம் வரும்டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஜீ சினிமா மற்றும் ஜீ டிவியில் லால் சலாம் படத்தின் இந்தி வெர்ஷன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தமிழ் வெர்ஷன் பற்றி இதுவரை எந்தவித தகவலம் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X