தோஹா ஏர்போர்ட்டில் படையப்பா ஸ்டைலில் ரசிகருக்கு ராயல் சல்யூட் அடித்த ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தோஹா விமான நிலையத்திற்குள் பேட்டரி காரில் செல்லும் வீடியோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் காரில் வந்திறங்கிய போட்டோக்கள் வீடியோக்களை வைரலானது.

படையப்பா ஸ்டைலில் சல்யூட்
தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை கத்தார் தலைநகர் தோஹா சென்றார். அப்போது ரஜினிகாந்த் பேட்டரி காரில் இருந்தப்படியே படையப்பா பட ஸ்டைலில் ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் ராயல் சல்யூட் அடித்தார்.
#Thalaivar #Superstar #Rajinikanth at Doha Airport earlier this morning. #ThalaivarLatest pic.twitter.com/1QmVjE7lza
— Praveen R (Praveen_RMM) June 19, 2021
ரசிகர்கள் கொண்டாட்டம்
தோஹா விமான நிலையத்தில் பேட்டரி காரில் அமர்ந்தப்படி நடிகர் ரஜினிகாந்த் செல்லும் வீடியோக்களும் சல்யூட் அடிக்குட் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோஹா விமான நிலையம்
மேலும் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது முதல் தோஹா விமான நிலையம் சென்றது வரை பல்வேறு போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினி ட்ரென்டிங்
இதனை தொடர்ந்து #Rajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. ரசிகர்கள் ரஜினியின் போட்டோக்களை பகிர்ந்து #Rajinikanth என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

விரைவில் திரும்ப வேண்டும்
மேலும் ரசிகர்கள் பலரும் சீக்கிரம் திரும்பி வாங்க தலைவா என்றும் விரைவில் மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











