அது சீன்லயே இல்லை.. திடீரென ரஜினி சார் என் கன்னத்தை கிள்ளிட்டாரு.. இளம் நடிகை பளிச் பேட்டி!
சென்னை: திடீரென நடிகர் ரஜினிகாந்த் தனது கன்னத்தை கிள்ளிட்டார் என இளம் நடிகை பெர்னா சமீபத்திய பேட்டியில் ஓபன் செய்துள்ளார். இளம் நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார் பெர்னா. இலங்கையில் படித்துக் கொண்டிருந்த தனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்து சினிமா சான்ஸ் தேடி ரொம்பவே அலைந்ததாக கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் ரொம்பவே சப்பியாக இருந்ததால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின்னர், நடிகைகளுக்கு உடம்பு தான் ரொம்பவே முக்கியம் என புரிந்துக் கொண்டேன். அதன் பின்னர், உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தீவிரமாக உடற்பயிற்சி எல்லாம் செய்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இளம் நடிகை பெர்னா: தளபதி விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் பெர்னா. அதன் பின்னர் 2022ல் வெளியான இளமை எனும் பூங்காற்று படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். ஃபைண்டர் மற்றும் கிளாஸ்மேட்ஸ் படங்கள் பெர்னா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. மேலும், குற்றச்சாட்டு எனும் படத்திலும் பெர்னா நடித்து வருகிறார்.
உப்புமா கம்பெனி படங்கள்: சினிமா ஆசையோடு வரும் அனைவருக்கும் ஆரம்பத்தில் சில உப்புமா கம்பெனிகள் தான் கிடைக்கும். அதே போலத்தான் நானும் பல உப்புமா கம்பெனிகளை நம்பி காலத்தை வீணடித்து விட்டேன். மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பே கடைசி நேரத்தில் தான் கிடைத்தது. பொதுவாகவே எனக்கு கடைசி நேரத்தில் சான்ஸ் கிடைக்கும் லக் தான் உள்ளது.

கன்னத்தை கிள்ளிய ரஜினிகாந்த்: அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ரஜினி சாருடன் பாடல் காட்சியில் சீன் என்று மட்டும் தான் சொன்னார்கள். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென ரஜினி சார் என் கன்னத்தை புடிச்சு கிள்ளிட்டாரு. எனக்கே ஷாக் ஆகிடுச்சு, அவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட் என் கன்னத்தை கிள்ளுறாரேன்னு பார்த்தேன். முதலில் இயக்குநர் அந்த சீனை சொல்லவே இல்லை. ஸ்பாட்டில் ரஜினி சார் பண்ணதை பார்த்த இயக்குநர் இது நல்லா இருக்கு என மிட் ஷாட் ஒன்றையும் படமாக்கினர். அதன் பின்னர் ரஜினி கன்னத்தை கிள்ளின பொண்ணு என்றே சினிமா வட்டாரத்தில் கொஞ்சம் ஃபேமஸ் ஆனேன் என சமீபத்திய பேட்டியில் பெர்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











