Rajinikanth: ரஜினியுடன் இணைய காத்திருக்கும் இன்னொரு சூர்யா பட இயக்குநர்... ரெடியான கேஜிஎஃப் டீம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 170க்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ரஜினி - லோகேஷ் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு சூர்யா பட இயக்குநரும் இந்த ரேஸில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் தலைவர் 171 அப்டேட்:
\சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஜெயிலர் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்து அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் ஷூட்டிங் முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 170 ஷூட்டிங் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஜினி தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. விக்ரம் படத்திற்கு முன்பே ரஜினிக்காக கதை தயார்செய்து வைத்திருந்தார் லோகேஷ். ஆனால், அப்போது அந்தக் கூட்டணி இணைய முடியாமல் போனது. அதனால், தற்போது ரஜினி-லோகேஷ் கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது புது தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, ரஜினிக்காக இயக்குநர் சுதா கொங்கராவும் ஒரு கதையுடன் காத்திருக்கிறாராம். இந்த கதையில் ரஜினி நடித்தால், அதனை தயாரிக்க ஹோம்பலே பிலிம்ஸ் ரெடியாக உள்ளதாம். ஏற்கனவே ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்கரா.

இந்நிலையில், ரஜினிக்காகவும் சுதாவிடம் ஒரு கதை இருப்பதாக தெரிகிறது. அதுமட்டும் இல்லாமல் ரஜினி, சுதா கொங்கரா, ஹோம்பலே பிலிம்ஸ் தரப்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.
அதன்படி, ரஜினி, சுதா, ஹோம்பலே பிலிம்ஸ் கூட்டணி உறுதியானால், இதுதான் தலைவர் 171 படமாக இருக்குமாம். அதன் பின்னரே ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையும் என தெரிகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமாகிவிட்டார் சுதா. அந்தப் படத்திற்காக 6 தேசிய விருதுகளையும் தட்டித் தூக்கியிருந்தார்.
இதனால், ரஜினி - சுதா கொங்கரா கூட்டணிக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. அதேநேரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் ரஜினி கண்டிப்பாக நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப், காந்தாரா படங்கள் மூலம் பிரபலமான ஹோம்பலே பிலிம்ஸ், ரஜினி படத்தை தயாரிக்கவுள்ளது திரையுலகையே மிரள வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











