»   »  பஸ்ஸில்லாம கஷ்டப்பட்டு வந்திருப்பீங்க.. ஸாரி! - ரசிகர்களிடம் நெகிழ்ந்த ரஜினி

பஸ்ஸில்லாம கஷ்டப்பட்டு வந்திருப்பீங்க.. ஸாரி! - ரசிகர்களிடம் நெகிழ்ந்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று இரண்டாம் நாளாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

நேற்று கருப்பு உடையில் வந்து ரசிகர்களிடம் பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டவர், இன்று முழுக்க வெள்ளை உடையில் வந்திருந்தார்.

Rajinikanth taking photos with fans for the second day

மண்டபத்துக்குள் வந்ததும் ரசிகர்களைப் பார்த்தவர், "பாவம்... பஸ்ஸில்லாம கஷ்டப்பட்டு வந்திருப்பீங்க.. ஸாரி..." என்றார் நெகிழ்ச்சியுடன். உடனே ரசிகர்கள், "தலைவா.. உங்களுக்காக நடந்தே கூட வருவோம்..," என்றனர்.

பின்னர் படமெடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது.

இரு கால்களையும் இழந்த ஒரு ரசிகர் மேடைக்கு கொண்டு வரப்பட்டபோது, உணர்ச்சி வசப்பட்ட ரஜினி, அவரை கைகளால் தடவிக் கொடுத்து வாழ்த்தி படமெடுத்துக் கொண்டார்.

இன்னும் மூன்று நாட்கள் ரஜினி ரசிகர்களைச் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றப் பொறுப்பாளர் விஎம் சுதாகர் செய்துள்ளார்.

English summary
Superstar Rajinikanth is meeting his fans for the second day for taking photos with them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil