பீஸ்ட்டை ரோஸ்ட் செய்த ரஜினிகாந்த்.. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்ன அந்த வார்த்தை!
சென்னை: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் சத்தம் எதிரொலித்த நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அதிகமாக தளபதி விஜய்யின் பெயரும் பீஸ்ட் படம் வச்சு செய்யப்பட்டதுமே அதிகமாக அரங்கேறியது.
அதிலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது பீஸ்ட் படத்தை ரோஸ்ட் செய்து விஜய் ரசிகர்களை கதற விட்டுள்ளார்.
மேலும், குறிப்பாக ரஜினிகாந்த் பேசும் போது சொன்ன அந்த வார்த்தை விஜய் ரசிகர்களை பலமாக குத்திக் கிழித்துள்ளது. ஜெயிலர் படம் வந்த உடனே இதற்கு நிச்சயம் விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்பது கன்ஃபார்ம். அப்படி ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பதை இங்கே பார்ப்போம்..

நெல்சனை அழ வைத்த ரஜினி: வார்த்தைக்கு வார்த்தை நெல்சன் சார் என்றும் ஒரு இயக்குநர் தான் ஹீரோவை உருவாக்குகிறார். என்னை உருவாக்கிய இயக்குநர்கள் பட்டியலில் முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், பா. ரஞ்சித் வரிசையில் நெல்சனின் பெயரையும் ரஜினிகாந்த் சொல்ல நெல்சன் கண்கள் அப்படியே குளமாகி விட்டன.
மேலும், ஜெயிலர் படத்தின் கதையை சொல்ல வரும் போது வீட்டில் நெல்சன் செய்த அலப்பறையையும் சொல்லி அரங்கத்தையே அதிர வைத்தார் ரஜினிகாந்த்.

பீஸ்ட்டுக்கு நல்ல ரிவ்யூ வரல: ஜெயிலர் படத்தின் கதை கேட்டேன் பிடித்துப் போனது. அதன் பின்னர் ஒரு ப்ரோமோ வீடியோவையும் நெல்சன் மற்றும் அனிருத்துடன் சேர்ந்து எடுத்தேன், அதனை நீங்க பார்த்துருப்பீங்க, அப்புறம் பீஸ்ட் ரிலீஸ் ஆகுது.
ஆனால், பீஸ்ட்டுக்கு நல்ல ரிவ்யூ வரல, ஒப்பினியனில் படம் அடிவாங்கிடுச்சுன்னு சொன்னாங்க, இனிமேலும், நெல்சன் நமக்கு வேண்டுமா சார் என எனக்கு தெரிந்த பல விநியோகஸ்தர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கேட்டாங்க.. ஆனால், ஒரு நல்ல இயக்குநர் எப்போதும் தோற்றுப் போக மாட்டார், அவர் செய்த சப்ஜெக்ட் தோற்றுப்போகலாம், அதற்கு சரியான ஆட்களை காஸ்ட் பண்ணலைன்னா அந்த படம் தோல்வியடையும் என ரஜினிகாந்த் பீஸ்ட்டை ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் ஸ்டேஜில் மொத்தமாக ரோஸ்ட் செய்து விட்டார்.
ரஜினி சொன்ன அந்த வார்த்தை: ஒரு படம் தோற்றுப் போனால், அந்த படத்திற்கு சரியான நடிகர்களை காஸ்ட் செய்யாதது கூட ஒரு காரணமாக இருக்கும் என ரஜினி பேசியது தான் தற்போது சமூக வலைதளத்தில், பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியது பிரச்சனை இல்லையாம், விஜய் ஒழுங்கா நடிக்காதது தான் பிரச்சனை என ரஜினி பேசியிருக்கார் என ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை ஓட்டி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனையே கடைசியில் விஜய் மீது கட்டிவிட்டு ரஜினிகாந்த் மாஸ் காட்டுகிறாரே என கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பான விவாதங்கள் வெடித்துள்ளன. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பீஸ்ட் படம் பற்றி பேசுவதையே ரஜினி தவிர்த்து இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.
ஆனால், இது ப்யூர் சினிமா பிசினஸ் என்றும் 48 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் ரஜினிகாந்துக்கு அது நன்றாகவே தெரியும் என்பதால் தான் இப்படியொரு பேச்சை அவர் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் என்றும் கருத்துக்கள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











