twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வசதி வாய்ப்பு அவர் கொடுத்தது.. இயக்குனர் கே.பாலசந்தர் 90 வது பிறந்த நாளில் ரஜினி உருக்கம்!

    By
    |

    சென்னை: இயக்குனர் கே.பாலசந்தரின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

    மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தருக்கு இன்று 90 வது பிறந்த நாள். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மாருமேல சூப்பர்ஸ்டார்.. நரம்புக்குள்ள சூப்பர்ஸ்டார்.. சிம்பு குரலில் தெறிக்குது ரஜினிகாந்த் ஆந்தம்!மாருமேல சூப்பர்ஸ்டார்.. நரம்புக்குள்ள சூப்பர்ஸ்டார்.. சிம்பு குரலில் தெறிக்குது ரஜினிகாந்த் ஆந்தம்!

    வசதியா வாழ காரணம்

    வசதியா வாழ காரணம்

    அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்னைக்கு எனது குருவான கே.பி சாருக்கு 90-வது பிறந்த நாள். கே.பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தலைன்னா கூட நான் நடிகனா ஆயிருப்பேன். கன்னட மொழியில, ஒரு வில்லன் பாத்திரம் பண்ணிட்டு, சின்ன சின்ன கேரக்டர் பண்ணிட்டு ஒரு சின்ன நடிகனா இருந்திருப்பேன். நான் இன்று பேர் புகழோட, நல்ல வசதியோட வாழறதுக்கு காரணமே, கே.பாலசந்தர் சார்தான்.

    நல்ல கேரக்டர்

    நல்ல கேரக்டர்

    எனக்கு பேரு வச்சு, என்னோட மைனஸ் எல்லாத்தையும் நீக்கி, எனக்குள்ள என்ன பிளஸ் பாயின்ட் இருக்குங்கறதை எனக்கே காட்டிக் கொடுத்து முழு நடிகனாக்கி, நாலு படங்கள்ல கான்ட்ராக்ட் போட்டு, நல்ல கேரக்டர் கொடுத்து, ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்தினாங்க. என் வாழ்க்கையில் என் அப்பா, அம்மா, வளர்த்து ஆளாக்கின என் அண்ணா, அப்புறம் கே.பாலசந்தர் சார்.

    எத்தனையோ டைரக்டர்கள்

    எத்தனையோ டைரக்டர்கள்

    இவங்க நான்கு தெய்வங்கள். பாலசந்தர் சார் எனக்கு மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்காங்க. பலரோட வாழ்வாதாரத்துக்கு காரணமா இருந்திருக்காங்க. நான் எத்தனையோ டைரக்டர்களோட வேலை செஞ்சிருக்கேன். இந்தியில ரமேஷ் சிப்பி, சுபாஷ் கய் போன்றவர்கள் பீம்சிங் இயக்கத்துல உன்னிடம் மயங்குகிறேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகலை, அப்புறம் கிருஷ்ணன் பஞ்சு டைரக்டர் பண்ணினார்.

    அப்படியொரு பர்சனாலிட்டி

    அப்படியொரு பர்சனாலிட்டி

    பிறகு மணிரத்னம், ஷங்கர் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, டைரக்டர் கே.பி.சார் செட்டுக்குள்ள வந்தா, டெக்னீஷியன்கள், ஆர்டிஸ்டுகள் கூட இல்லை, மேல உட்கார்ந்திருக்கிற லைட்பாய் கூட வணங்கம் சொல்வாங்க. அந்தளவுக்கு கம்பீரமா இருப்பார். இதுபோல வேற யார்கிட்டயும் நான் பார்த்ததில்லை. அப்படியொரு பர்சனாலிட்டி.

    மகிழ்ச்சி அடைகிறேன்

    மகிழ்ச்சி அடைகிறேன்

    அவர் ஒரு மகனா, கணவனா, தந்தையா, டைரக்டரா தனது கடமையை பெர்பக்டா செஞ்சு ரொம்ப சீக்கிரமா நம்மள விட்டு பிரிஞ்சுட்டாங்க. அவர் இன்னும் நிறைய நாள் வாழ்ந்திருக்கணும். அவ்வளவு பெரிய மகான். அவரோட இந்த 90 வது பிறந்த நாள்ல அவரை நினைவுபடுத்தறதுல நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    Rajinikanth Remembering the 90th birthday of the director K Balachander today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X