Rajinikanth: இந்தியன் 2 படம் எப்படி இருக்கு?.. ரியாக்சனுடன் ரஜினி கொடுத்த பதில்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படம் குறித்தும், தனது வரவிருக்கும் படங்களான 'கூலி' மற்றும் 'வேட்டையன்' பற்றியும் பதில் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கேரளாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்போது, விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள், 'இந்தியன் 2’ படம் பார்த்தீர்களா படம் எப்படி இருக்கு என்று கேட்டனர், அதற்கு அவர், படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்.

வேட்டையன் ரிலீஸ் எப்போது: இதைத்தொடர்ந்து 'வேட்டையன் ரிலீஸ் தேதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன என்றார். முன்னதாக, 'வேட்டையன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜூன் மாதம் இமயமலைக்கு தனது யாத்திரை சென்ற போது, "'வேட்டையன்' தசரா பாண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என கூறியிருந்தார். தற்போது, இன்னும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளதால், வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி அல்லது அதன் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்காக: ஆனால், சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், 'வேட்டையன்' படம் தீபாவளிக்கு தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாகவும், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, "ரஜினிகாந்த் படத்துடன் நான் எந்த நாளும் மோத மாட்டேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இதனால், வேட்டையன் படம் நிச்சயம் தள்ளுப்போகும் வாய்ப்பு உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் கூலி: வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என பலர் நடித்து வருகின்றனர். மேலும் பலர் கேமியோ ரோலிலும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகின்றது. தங்க கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











