சப்பியா பன் மாதிரி இருப்பா.. மீனா பொண்ணுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த சூப்பர்ஸ்டார்!

சென்னை: நடிகை மீனாவின் 40வது ஆண்டு சினிமா விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மீனா பற்றி பேசிய ப்ரோமோ வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் நடிகை மீனாவின் 40வது ஆண்டு சினிமா விழாவில் கலந்து கொண்டு மீனா பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

கணவரை மீனா இவ்வளவு சீக்கிரத்தில் இழந்திருக்கக் கூடாது என ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த விழாவில் மீனாவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பேசியது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சினிமாவில் 40 ஆண்டுகள்

சினிமாவில் 40 ஆண்டுகள்

நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட படங்கள் மூலம் 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை மீனா 40 ஆண்டுகள் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக தென்னிந்திய ஸ்டார் நடிகர்களுடன் நடித்து தானும் ஒரு சிறந்த ஸ்டாராக மாறி ஏகப்பட்ட ரசிகர்கள் மனங்களில் நிறைந்துள்ளார். அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் சமீபத்தில் 40வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

ஏகப்பட்ட பிரபலங்கள்

ஏகப்பட்ட பிரபலங்கள்

நடிகை மீனாவின் 40வது ஆண்டு சினிமா விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில், நடிகைகள் ராதிகா, ரோஜா, சினேகா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இசையமைப்பாளர் தேவா, நடிகர் பிரசன்னா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் மீனாவை பற்றி பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மோகன்லால் முதல் சூப்பர் ஸ்டார் வரை

மோகன்லால் முதல் சூப்பர் ஸ்டார் வரை

மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடன் பல படங்களில் மீனா நடித்துள்ள நிலையில், மீனா 40 நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலமாக மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீனா பற்றி பேசியது தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

பன் மாதிரி

பன் மாதிரி

சும்மா சப்பியா.. பன் மாதிரி இருப்பா மீனா என மேடையேறிய ரஜினிகாந்த் பேசிய ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும், இயக்குநர் சேரன் பேசும் போது மெழுகு பொம்மை, தங்க சிலை போல மீனா சிலை என வர்ணித்து இருந்தார். சதீஷ் பேசும் போது மீனா 20 ஃபேனா இருந்தேன், மீனா 40 ஃபேனா இருக்கேன்.. மீனா பாட்டியா ஆனாலும் ஃபேனா இருப்பேன் என காமெடியாக பேசி மேடையை கலகலப்பாக மாற்றினார்.

இறுக்கி அணைச்சு உம்மா

இறுக்கி அணைச்சு உம்மா

ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என ஆரம்பித்து மேடையில் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கேட்டு ரஜினிகாந்திடம் நெற்றியில் முத்தம் வாங்கிக் கொண்ட மீனாவின் மகள் நைனிகாவின் குறும்புத்தனத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த பொண்ணா இப்படி வளர்ந்து விட்டார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீனாவுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது

மீனாவுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, மீனாவுக்கு அப்படியொரு சோகம் நடந்து விட்டது என ரஜினிகாந்த் பேசி ஆறுதல் சொல்லும் நிலையில், மீனாவுக்கு அப்படி நடந்திருக்ககூடாது என பல பிரபலங்களும் கணவர் வித்யாசாகரை இழந்து தவிக்கும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X