Rajinikanth: அயோத்தி ராமர் கோயிலில் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று பிரம்மாண்ட விழாவுடன் திறக்கப்பட்டது. பிரமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் முன் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், முகேஷ் அம்பானி அவரது மனைவி நிதா அம்பானி உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டது. மோடி முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களை சந்தித்து வணக்கம் வைத்த காட்சிகள் வெளியாகின. வட இந்திய மீடியா ஒன்றுக்கு ரஜினிகாந்த் அந்த இடத்திலேயே அளித்த பேட்டி வீடியோ தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்ற நிலையில், அவருக்கு முன் வரிசையில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என ரஜினி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பரவாயில்லை என ரஜினிகாந்த் மட்டுமே முன் வரிசையில் அமர்ந்துக் கொண்டார்.

ஜெய் ஸ்ரீராம் சொன்ன ரஜினிகாந்த்: டைம்ஸ் நவ் எடுத்த பேட்டியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஜெ ஸ்ரீராம் சொல்லி பேசத் தொடங்கினார். வரலாற்று சிறப்புமிக்க நாளில் வரலாற்று சிறப்புமிக்க விழாவில் நானும் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.
போராட்டங்களும் பல தியாகங்களும்: 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர் கேட்க, பல போராட்டங்கள், பலரது தியாகங்கள் காரணமாகத்தான் அயோத்தியில் ராமர் கோயில் உருவாகி உள்ளது என ரஜினிகாந்த் பதில் அளித்தார்.
மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க: ராமரின் ஆசிர்வாதத்தால் உலகில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள் என பேசியுள்ளார். அயோத்தியில் பல பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி அவருடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டனர்.
அனுபம் கெர் சந்திப்பு: முன்னதாக அயோத்திக்கு ரஜினிகாந்த் வந்ததை அறிந்த அனுபம் கெர் முதல் ஆளாக ரஜினிகாந்தை சந்தித்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே பல சினிமா பிரபலங்கள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வருகை தந்தனர். நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











