ஷங்கர் வீட்டு திருமணத்தில் ருசித்து சாப்பிட்ட ரஜினிகாந்த்.. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல்னா சும்மாவா!
சென்னை: பொதுவாகவே பிரபலங்களின் திருமண விழாவுக்கு சென்றால் நடிகர் ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடாமல் அங்கிருந்து கிளம்பி விடுவார். ஆனால், இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் திருமண விருந்தை ருசித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். காதலன், ஜீன்ஸ், இந்தியன், பாய்ஸ், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவாஜி படத்தை கொடுத்தார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து எந்திரன் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தனர். எந்திரன் திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், 2.0 திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை தமிழ் சினிமாவின் அதிக வசூல் சாதனை படைத்த படமாக உள்ளது.
திருமண விழாக்களில் ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் என யார் தங்களது இல்ல திருமண விழாவுக்கு அழைத்தாலும் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நயன்தாரா திருமணம், விஜயகுமார் பேத்தி திருமணம், ரோகினி தியேட்டர் ஓனர் மகன் திருமணம் என வரிசையாக பல திருமண விழாக்களில் பங்கேற்று வரும் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண விழாவிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஓடி ஓடி உழைத்த அட்லீ: ஷாருக்கானை வைத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த ஜவான் படத்தை இயக்கினாலும் தனது குருநாதர் ஷங்கருக்கு எப்போதுமே நான் அசிஸ்டெண்ட் டைரக்டர் தான் என்பது போல, அவருடைய மகள் திருமண விழாவில் அனைத்து வேலைகளையும் அட்லீ இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார் என்றும் பிரபலங்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டு செல்கிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளும் வேலையும் அட்லீயிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ருசித்து சாப்பிட்ட ரஜினி: பொதுவாக திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தும் ரஜினிகாந்த் கூட்ட நெரிசல் காரணமாக பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து விடுவார். ஆனால் ரஜினிகாந்த் சாப்பிட்டே ஆக வேண்டும் என ஷங்கர் வலியுறுத்திய நிலையில், அதற்கான ஏற்பாடுகளையும் அட்லீ கவனித்துக் கொண்டார் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை ருசித்து சாப்பிட்டார் ரஜினி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல்: குக் வித் கோமாளி சீசன் 5ன் நடுவராக மாறியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண விழாவில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களின் வயிற்று பசியை ஆற்றியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், நெல்சன், ராம்சரண், ஜான்வி கபூர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் இந்த திருமண விழாவில் பங்கேற்று ரசித்து ருசித்து சாப்பிட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











