வாவ்.. பியர் கிரில்ஸ்க்கு தனது ஸ்டைலில் கண்ணாடி போட கற்றுக்கொடுத்த ரஜினி.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ்க்கு தன்னுடைய ஸ்டைலில் கண்ணாடி போட கற்றுக்கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்று பெரும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் இயக்குநருமான பியர் கிரில்ஸுடன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் காட்சியாக்கப்பட்டது. மூன்று நாட்கள் இதுதொடர்பான படப்பிடிப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மார்பளவு தண்ணீர்
ஆனால் ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்தது. இதுதொடர்பான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், ஹெல்மெட் போட்டுக்கொண்டு ட்ராக்டர் போன்ற இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, கயிறை பிடித்துக்கொண்டு மலை ஏறுவது, ஆற்றில் இறங்கி மார்பளவு தண்ணீரில் நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

க்யூட் மொமென்ட்
மேலும் தனது ஸ்டைலில் கண்ணாடியை போடுவது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் செய்த க்யூட்டான குட்டி குட்டி மொமென்ட்டுகள் இடம்பெற்றுள்ளன.
குழந்தையை போல்
அதில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடப்பது.. ஓடுவது.. சிரிப்பது.. மந்திரம் போட்டு தனது வண்டியை மாயமாக்குவது என அதகளப்படுத்தியிருக்கிறார். மேலும் ஹூஹு என கைகளை மடக்கி குத்தி கத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு குழந்தையை போல் கொண்டாடியிருக்கிறார் ரஜினி.

சொதப்பிய பியர் கிரில்ஸ்
மற்றொரு வீடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் ரஜினிகாந்த் ஸ்டையில் கண்ணாடி போட முயற்சி செய்கிறார். ஆனால் அவருக்கு அது சுத்தமாக வரவில்லை. ஒவ்வொரு முறையும் ரஜினி சொல்லிக் கொடுத்தபோதும் சொதப்பினார் பியர் கிரில்ஸ்.
நீங்கள் மூவி ஸ்டார்
இதனை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தே பியர் கிரில்ஸின் கைகளில் இருந்து கண்ணாடியை வாங்கி செய்து காண்பித்தார். பின்னர் ஒரு வழியாக சுமாராக போட்டார். அதன் பிறகு ரஜினி ஸ்டைலாக கண்ணாடி போட்டதை பார்த்த பியர் கிரில்ஸ், அதனால்தான் நீங்கள் மூவி ஸ்டார் என்று குறிப்பிட்டார். இதனைக்கேட்ட ரஜினிகாந்த் அவரது முதுகில் தட்டிக்கொடுத்தார் இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











