தலைவர் 169 இயக்குனர் இவரா ?... தாறுமாறு அப்டேட்…எல்லாம் அவரோட ராசிதான் !

சென்னை : ரஜினி நடிக்கவுள்ள 'தலைவர் 169' படத்தின் இயக்குனர் குறித்த மாஸ் அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரஜினியின் பிறந்தநாள் அன்று தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போது தலைவர் 169 படத்திற்கான மாஸாக டீம் தயாராகி உள்ளது.

அண்ணாத்த

அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியானது. அண்ணன் தங்கை செண்டிமெண்ட் கொண்ட இத்திரைப்படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

பெயர்கள் அடிபட்டன

பெயர்கள் அடிபட்டன

அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே ரஜினியின் அடுத்த படத்தையும் இயக்க போவதாகவும் தகவல் பரவியது. மேலும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, பால்கி, பாண்டியராஜ், கார்த்திக் சுப்புராஜ் என பலரின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வந்தன. ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இவர் தான் இயக்குனர்

இவர் தான் இயக்குனர்

இந்நிலையில், தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு கோடையில் தொடங்க உள்ளதாகவும் இணையத்தில் தீயாக தகவல் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

விஜய்யின் ராசி

விஜய்யின் ராசி

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், நெல்சனுக்கு சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. விஜய்யின் ராசிதான் இதற்கு காரணம் என்று விஜய்யின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X