நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனாவா..? பொறுப்பில்லை.. கிண்டலடித்த நடிகரை விளாசித் தள்ளிய ரசிகர்கள்!
சென்னை: ரஜினிக்கு கொரோனா என்று கிண்டலடித்த இந்தி நடிகரை ரசிகர்கள் விளாசித் தள்ளினர்.
இந்தியில் காபில், அபார்ட்மென்ட், டெல்லி ஹைட்ஸ், எல்ஓசி கார்கில் உட்பட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர் ரோகித் ராய்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஏராளமான தொடர்களில் நடித்துள்ள அவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

கொரோனா தனிமை
இவர் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் பற்றி ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இப்போது கொரோனா தனிமைப் படுத்தப்பட்டுள்ளது' என்று கிண்டலாகக் கூறியிருந்தார். இது பரபரப்பானது.

பாதுகாப்பாக இருங்கள்
கூடவே, கொரோனாவை வெல்வோம். நீங்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது கவனமாக இருங்கள். மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள், சானிடைசரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்துங்கள். நாம் அந்த வைரஸை அனுமதிக்காத வரை, அது நம்மை பாதிக்காது. பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறியிருந்தார்.

அமிதாப் பச்சன்
இதையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாகக் காய்ச்சி எடுத்தனர். இதை உண்மைதானா? என் நெஞ்சமே வெடித்துவிடும் போலிருக்கிறது என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். இன்னொருவர், ஏன் எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஊர் நடிகர்களான அமிதாப்பச்சன், ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோர் பெயரை பயன்படுத்த வேண்டியதுதானே? என்று காட்டமாகக் கேட்டிருந்தார்.

நீக்க வேண்டும்
இன்னும் சிலர், இதை உடனடியாக நீக்குங்கள், இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதீர்கள் என்று கூறியுள்ளனர். ரஜினி ரசிகர்களை காயப்படுத்துகிறீர்கள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது பொறுப்பிருக்கிறதா? உடனே இதை நீக்க வேண்டும் என்று கேட்டு ரசிகர்கள் சிலர் கடுமையான விளாசினர். ஆனால், அவர் இதை நீக்கவில்லை.

மோசமான ஜோக்
இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள பதிலில், இது சாதாரண ரஜினி ஸ்டைல் ஜோக்தான். இது மோசமான நகைச்சுவை என்று நினைக்கவில்லை. என் நோக்கம் உங்களை புன்னகைக்க வைக்க வேண்டும் என்பதுதான். கருத்துத் தெரிவிக்கும் முன் என் நோக்கத்தை கவனியுங்கள். உங்கள் கருத்துக்கள்தான் என்னை காயப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











