Thalaivar 170 ...படத்தின் இயக்குநர் இவரா?....ரசிகர்களின் ஆவலை கிளப்பும் தகவல்

சென்னை : ரஜினி நடிக்க உள்ள தலைவர் 169 திரைப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத நிலையில், தலைவர் 170 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானத் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில், மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் அண்ணான நடித்திருந்தார் ரஜினி. அண்ணன் தங்கை சென்டிமெண்ட் படமாக இருந்தாலும் இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

தலைவர் 169

தலைவர் 169

அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வியால், ரஜினிகாந்த் தற்போது வெற்றியை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால், பல இயக்குநர்களிடம் கதையை கேட்டு ரஜினி, இறுதியில் டாக்டர் படம் பார்த்து பிடித்துப்போனதும் நெல்சனிடம் கதை கேட்டு நடிக்க சம்மந்தம் தெரிவித்துள்ளார். தலைவர் 169 திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

தலைவர் 169

தலைவர் 169

பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்பே தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வெளியானது. நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அண்மையில் வெளியாகி பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால், தலைவர் 169 திரைப்படம் குறித்த அச்சம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதனால், நெல்சனுக்கு பதில் வேறு இயக்குநரின் படத்தில் நடிக்கலாமா என்ற எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி 170

ரஜினி 170

இந்நிலையில், ரஜினியின் 170-வது படத்தை இயக்குநரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ரஜினிக்கு கதை சொல்லியதாகவும், கதையைக் கேட்ட ரஜினிகாந்த், ஸ்கிரிப்ட் தனக்குப் பிடித்திருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற நெருப்புடா, நெருங்குடா என்ற பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

பாலிவுட்டில் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தின் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று வெளியாகி பலரின் பாராட்டை குவித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே, திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த முதல்வர் ஸ்டாலின், தனது மகனின் நடிப்பையும் பாராட்டிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X