Thalaivar 171: தலைவர் 171 லுக்கை மட்டும் இப்படி லோகி வெளியிட்டா அன்னைக்கே தீபாவளி.. ஃபயர் மோட்!

சென்னை: Thalaivar 171 - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல ஏஐ உருவாக்கி உள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் அடுத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அந்த படம் தலைவருக்கு தரமான ட்ரிப்யூட் படமாக இருக்கும் என பேட்டிகளில் கூறி ரஜினி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்து வருகிறார்.

Rajinikanth Thalaivar 171 AI made look vows fans

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் முந்துமா? முந்தாதா? என்கிற கேள்வி இருந்தாலும், நிச்சயம் கோலிவுட்டில் வெளியான அனைத்து படங்களின் பாக்ஸ் ஆபிஸையும் தலைவர் 171 தூக்கி சாப்பிட்டு விடும் என்று தான் தோன்றுகிறது.

ஸ்பீடு காட்டும் ரஜினி: ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் ஈட்டியது என நிஜத்தை ஓபனாக சொன்ன ரஜினிகாந்த் அடுத்து திருவனந்தபுரத்தில் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். ஜெய்பீம் படத்தையே சில நாட்களில் முடித்த ஞானவேல் ரஜினிகாந்தின் படத்தையும் இந்த ஆண்டுக்குள் முடித்து விடுவார் என்றே தெரிகிறது.

திருவனந்தபுரம் ஷெட்யூல் ஜெட் வேகத்தில் நடந்து முடிந்து அடுத்த லொகேஷனுக்கு படக்குழு நகர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 171: ஸ்ரீயை ஹீரோவாக வைத்து மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி, விஜய்யை வைத்து மாஸ்டர் தற்போது லியோ கடந்த ஆண்டு கமல்ஹாசனை வைத்து விக்ரம் என மாஸ் காட்டி வருகிறார்.

அனைத்திற்கும் உச்சமாக சூப்பர்ஸ்டாரை வைத்து அடுத்த ஆண்டு தலைவர் 171 படத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜெயிலர், தலைவர் 170 படங்களிலேயே மல்டி ஸ்டார் காஸ்டிங் உள்ள நிலையில், தலைவர் 171 படம் எல்சியூவில் இணைந்தால் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதுவரை பண்ணாத படமாக வித்தியாசமான சோதனை முயற்சியை செய்யப் போவதாக லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கும் நிலையில், ஸ்டாண்ட் அலோன் படமாகத்தான் வரும் என தெரிகிறது.

இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக்: ஏஐ தொழில்நுட்பத்தில் ரஜினிகாந்த் போல ஏகப்பட்ட போட்டோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அஜித் மற்றும் ரஜினிகாந்த் அஜர்பைஜானில் இருப்பது போல உருவாக்கப்பட்ட படங்கள் டிரெண்டான நிலையில், பாட்ஷா 2 ரேஞ்சில் ஒரு பக்காவான கேங்ஸ்டர் லுக்கில் கையில் ரிவால்வருடன் ரகளை செய்யும் ரஜினிகாந்தின் புகைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X