சுந்தர் C போனா போகட்டும்.. தலைவருக்கு இல்லாத இயக்குநர்களா? நாளை வெளியாகும் அறிவிப்பு.. இதிலும் அரசியலா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவரது நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இது ரஜினியின் 173வது படம், இந்த படத்தின் முக்கியமான அப்டேட் நாளை அதாவது ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தலைவர் 173 என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகி, படத்தை சுந்தர் சி இயக்குவதாக புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. ஆனால் படத்தில் இருந்து வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் கொடுத்தது. குறிப்பாக கமல்ஹாசனிடம் கூட முறையாக தெரிவிக்காமல் சுந்தர் சி வெளியேறியது மொத்த திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கு காரணம் சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும், இதுதான் மிக முக்கியமான காரணம் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்திக்கும்போது, நல்ல கதை இருக்க வேண்டும், கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் பல இளம் இயக்குநர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அணுகி கதை சொன்னார்கள். ரஜினி இந்த படத்தை முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.
அப்டேட்: இப்படி இருக்கையில் இந்த படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நாளை வெளியாகவுள்ள அறிவிப்பில் படத்தின் இயக்குநர் யார் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மொத்தமாக குஷியில் உள்ளனர்.
அரசியலா: இப்படி இருக்கும்போது நாளை படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதில் அரசியல் இருப்பதாக இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது நாளை மாலை விஜயின் ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. இப்படி இருக்கும்போது, அதன் மீதான கவனத்தை திசை திருப்பவே, நாளை படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 173 வது படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. இப்படியான தகவல் பரவுவதைப் பார்த்த ரசிகர்கள் இதிலும் அரசியலா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











