Thalaivar 173: தேதி குறிச்சாச்சு.. ரெஸ்ட்டே எடுக்காமல் கமலுக்காக ரெடியாகும் ரஜினி.. தலைவர் 173 அப்டேட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75 வது பிறந்த நாளை கடந்த டிசம்பரில் கொண்டாடினார். ஆனால் இவரது 75ஆவது பிறந்த நாளுக்குப் பிறகு தான் வழக்கத்தை காட்டிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார், இதை பார்த்த பலரும் தலைவருக்கு 75 வயசுனு சொன்னா தலைவரே நம்பமாட்டாரு போல, இவ்வளவு ஸ்பீடா இருக்கிறாரே, சுத்தி போடுங்க பாஸ் என்று கூறி வருகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் ஏதோ பில்டப் எல்லாம் இல்லை. முழுக்க முழுக்க நிதர்சனம். அதை உறுதிப்படுத்த பல காரணங்கள் உள்ளது. அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 172 வது படமான ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் படத்தை இயக்குகிறார். அதேபோல் அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

ஜெயிலர் 2 படத்தை முடித்ததும் உடனடியாக தலைவர் 173 படத்தின் படப்பிடிப்புகளில் களமிறங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதாவது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பானது வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth Thalaivar 173 Update Shooting Will Start From April Says Cibi Chakravarthy

இது ஒருபுறம் இருக்க வழக்கமாகவே சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாத காலம் இடைவெளி எடுத்து விட்டுத்தான் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அதுவும் இந்த காலகட்டத்திற்குள் தான் கமிட் ஆகியுள்ள படம் இல்லாமல், அதற்கு அடுத்த படத்தின் கதையைக் கேட்டு தீர்மானிப்பார். ஆன்மீகச் சுற்றுலா செல்வார் என்பது போன்ற ஆக்டிவிட்டிகளில் ஈடுபடுவார்.

ஆனால் இம்முறை உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் படத்தில் கமிட் ஆகி உள்ளதால், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ஒரு மாத காலத்திற்கு குறைவான இடைவெளியில் தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தாய் கிழவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசுகையில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

Rajinikanth Thalaivar 173 Update Shooting Will Start From April Says Cibi Chakravarthy

அதாவது தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கவுள்ளது, இதுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்று தெரிவித்தார். அவர் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, சித்திரை 1ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்புள்ளது என்று பேச்சுக்கள் இப்போதே தொடங்கிவிட்டது. மேலும் கமல்ஹாசனுக்காக ரெஸ்ட் கூட எடுக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிக்க வருகிறாரே என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X