திருமணம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம்... தளபதி நடிகை எடுத்த முடிவு.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் பல திரைப்பிரலபங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக நடிகை த்ரிஷா, ஷகிலா, ஷோபனா, பிரபாஸ், அனுஷ்கா என இந்தப் பட்டியல் தென்னிந்திய சினிமாவில் நீண்டு கொண்டே போகும். அதேபோல் திருமணம் செய்து கொண்ட பின்னர், அதிலிருந்து வெளியேறி அதாவது, விவாகரத்து பெற்ற பின்னர், மறுமணம் செய்து கொள்ளாமலும் பல திரைப்பிரபலங்கள் உள்ளனர். இப்படியான நிலையில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.

நடிகை ஷோபனா தென்னிந்திய திரைப்பிரபலமாக இருந்தாலும் இந்தியத் திரையுலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நபர். நடிகையாக மட்டும் இல்லாமல், இந்தியாவிலேயே தலைசிறந்த பரதநாட்டிய பள்ளியையும் இவர் நடத்தி வருகின்றார். இதன் மூலம் பலருக்கும் இலவசமாக பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகின்றார். அவ்வப்போது, சினிமாவிலும் நடித்து வருகின்றார். கடைசியாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு, கல்கி 2898 ஏ.டி படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஷோபனா: ஷோபனாவைப் பொறுத்தவரை, தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் தனது சினிமா வாழ்க்கையினை குழந்தை நட்சத்திரமாக நடித்துத் தொடங்கியவர். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்தார். குறிப்பாக இது நம்ம ஆளு, சிவா, எங்கிட்ட மோதாதே, பொன்மன செல்வன், மல்லு வேட்டி மைனர், தளபதி என கூறிக்கொண்டே போகலாம்.

பத்ம விருதுகள்: தமிழில் கமல், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்டோருடனும் இணைந்து நடித்துள்ளார். ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்ததை வைத்துத்தான் பலரும் தன்னை அடையாளம் காண்பதாக அவரை பல பேட்டிகளில் கூறியுள்ளார். இவருக்கு கடந்த 2006ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த, மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வழங்கினார். சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம்: ஷோபனாவுக்கு தற்போது 54 வயது ஆகின்றது. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார். இது தொடர்பாக அவர் பேசும்போது தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது, தனக்கு தனிமையாக வாழவே பிடித்திருக்கின்றது. திருமணத்தின் மீது ஈர்ப்பு இல்லை. தனிமையாக வாழ்வதுதான் நிம்மதியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷோபனா ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.



Click it and Unblock the Notifications











