இந்தியர்களுக்கு வேலை... ஒரு இந்தியனா துபாய் அரசருக்கு நன்றி! - ரஜினிகாந்த்
Recommended Video

துபாய்: ஏராளமான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்துள்ள துபாய் அரசருக்கு ஒரு இந்தியனாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறினார்.
2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய் நகரில் கோலாகலமாக நேற்று நடந்தது. நள்ளிரவு வரை நீண்ட இந்த இசை விழாவுக்கு துபாய் அரசர் வந்திருந்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினிகாந்த் தன் பேச்சில் துபாய் அரசருக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் துபாய்க்கு வந்தது இதுதான் முதல் முறை. நிறையமுறை, வேறு நாடுகளுக்குச் செல்லும்போது வழியில் இங்க இறங்கி ஏர்போர்ட்டில் தங்கி இருக்கேன்.
ஏர்போர்ட்டுக்கு வெளியே துபாய்க்கு வருவது இதுதான் முதல் முறை. இந்த துபாய் தெற்காசியாவில் ஒரு அமெரிக்கா. எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க. எத்தனையோ இந்தியர்கள் இங்கே வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்த துபாய் அரசருக்கு ஒரு இந்தியனா நன்றி தெரிவிச்சிக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











