Rajini: வாழ்த்தாத விஜய்.. பட்டியல் போட்டு குத்திக் காட்டிய ரஜினி.. இவங்க பனிப்போர் முடியாது போலயே?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், அதன் பின்னர் 50 ஆண்டுகளாக தமிழ், இந்தி, ஹாலிவுட் என மன்னாதி மன்னனாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று 79 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், தான் 50 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய புள்ளிகளின் பெயரைப் பட்டியலிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் விஜய் பெயர் இடம் பெறவில்லை. மேலும் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தனது நன்றிக் குறிப்பில், " அனைவருக்கும் 79 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். எனது 50 ஆண்டு கால திரையுலக பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் விஜய் பெயர் இடம் பெறாதது குறித்த பேச்சு திரைத்துறை வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் விஜய் வாழ்த்து தெரிவிக்காதது தான் இதற்கு காரணம். விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தால் ரஜினி அவரது பெயரைக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் விஜய் வாழ்த்தாத காரணத்தால், ரஜினி, விஜய் பெயரைக் குறிப்பிடவில்லை.
பனிப்போர்: இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும், இவர்களுக்கு இடையிலான பனிப்போர் முடியவே முடியாதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுவதும் கதை சொல்லுவதும் நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துத்தான் பேசுகிறார் எனவும், அதேபோல் விஜய் பேசும்போது ரஜினியை மறைமுகமாக அட்டாக் செய்கிறார் என்ற விமர்சனம் இருவர் மீதும் உள்ளது. லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் ரஜினி அதுபோல எதுவும் இல்லை எனக் கூறினார். சரி பனிப்போர் முடிந்தது என்று பார்த்தால், அது முடியவில்லை நீளுகிறது எனக் கூறும் அளவுக்குத்தான் உள்ளது சமீபத்திய நடவடிக்கைகள்.
ரசிகர்கள்: அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ரஜினியை வாழ்த்தாதது பலருக்கும் அதிர்ச்சிதான். இப்படி இருக்கும்போது, வாழ்த்து சொல்லாத விஜய் பெயரை தவிர்த்துவிட்டு, மற்றவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி சொல்வது முறைதானே எனவும் பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











