இந்தப் படம் தேறாது என முடிவெடுத்த ரஜினி .. முதல் நாள் வசூலே ஒரு கோடியை நெருங்கியது..
சென்னை: இந்தப் படம் ஓடவே ஓடாது என்று ரஜினி நினைத்த படம் முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருக்கிறது.
சினிமா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ரஜினி அபூர்வ ராகங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும், கமலுடனும் நடித்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறிய ரஜினி இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார். அவருக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவரை தலைவா என்றும் அன்போடு அழைக்கின்றனர்.

மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்
இப்போது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினி ஆரம்பகாலத்தில் மிகச்சிறந்த இயக்குநர்களின் இயகக்த்தில் நடித்தார். அப்படி அவர் கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், சுந்தரராஜன் என கமிட்டான இயக்குநர்கள் அனைவருமே சினிமாவில் மாஸ்டர்ஸ். அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதியவை என்பது நிதர்சனம். அதன் மூலம்தான் ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகன் என்று ரசிகர்களுக்கு புரிந்தது.

சுந்தரராஜன் க்ளாஸ் இயக்குநர்
சுந்தரராஜன் இயக்கிய அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, திருமதி பழனிசாமி, சுகமான ராகங்கள், குங்கும சிமிழ் என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். விஜயகாந்த்துக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் வைதேகி காத்திருந்தாளும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் ஓடவே ஓடாது என்று முடிவெடுத்த ரஜினி
இந்தச் சூழலில் அவர் ரஜினியை வைத்து படம் இயக்க கமிட்டானார். ஆனால் படத்தின் முழு கதையையும் ரஜினியிடம் சுந்தரராஜன் கூறவில்லை. சுந்தரராஜன் மிகப்பெரிய இயக்குநர் என்பதால் நம்பி படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் ரஜினி. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தரராஜன் ஷூட்டிங் ஸ்டைலை பார்த்த ரஜினிக்கு மிகப்பெரிய அதிருப்தி. அதுமட்டுமின்றி இந்தப் படம் நிச்சயம் ஓடாது. ஒத்துக்கொண்டுவிட்டோம் அதனால் நடித்துக்கொடுப்போம் என்ற எண்ணத்திலேயே ரஜினி நடித்திருக்கிறார்.

வசூலில் ஒரு கோடியை நெருங்கிய படம்
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸாகியிருக்கிறது. ஆனால் ரஜினியே எதிர்பார்க்காத வகையில் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்திருக்கிறது. இதனால் படமானது முதல் நாளிலேயே 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவசூலித்திருக்கிறது. இது ஷோலே படத்தை விட முதல் நாள் வசூலில் அதிகம் என கூறப்படுகிறது. முதல் நாள் மட்டுமின்றி நாள்கள் செல்ல செல்ல குடும்பம் குடும்பமாக வந்து படத்தை ரசித்திருக்கின்றனர்.
இதனால் சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் படமானது 100 நாள்கள் ஓடியிருக்கிறது. அதுமட்டுமின்றி தென்காசியில் முதல்முதலாக 100 நாள்கள் ஓடிய படம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. அப்படி ரஜினியின் கணிப்பை தவிடுபொடியாக்கி வசூலில் சக்கைப்போடு போட்ட படம், ரஜினி, கௌதமி உள்ளிட்டோர் நடித்திருந்த 'ராஜாதி ராஜா' திரைப்படம்.


Click it and Unblock the Notifications











