»   »  ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல் எதிரொலி: தானாக முன்வந்து தனுஷ் விளக்கம்

ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல் எதிரொலி: தானாக முன்வந்து தனுஷ் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாஜி மஸ்தானின் மகன் மிரட்டல் விடுத்ததை அடுத்து ரஜினியின் புதுப்படம் குறித்து தனுஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று கூறப்பட்டது. இதையடுத்து ஹாஜி மஸ்தானின் மகன் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் ரஜினிக்கு மிரட்டில் விடுத்துள்ளார்.

தனது தந்தை தாதா இல்லை என்றும் அவரை படத்தில் தாதாவாக காட்ட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

தனது கடிதத்தையும் மீறி ஹாஜி மஸ்தானை தாதாவாக காட்டினால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சுந்தர் சேகர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தனுஷ்

தனுஷ்

ஹாஜி மஸ்தானின் மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து அதன் தயாரிப்பாளரான தனுஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இல்லை

இல்லை

பா. ரஞ்சித்-ரஜினிகாந்த் சேர்ந்து பண்ணும் படம் ஹாஜி மஸ்தானின் கதை அல்ல. மும்பை பின்னணியை கொண்டு எடுக்கப்படும் கற்பனைக் கதையே என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படம் யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல. மேலும் நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கும் படமும் அல்ல என்று தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Producer Dhanush has given explanation about Rajinikanth's upcoming movie to be directed by Pa. Ranjith after Haji Mastan's son threatened the super star.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil