ரஜினி - கமல் இணையும் படம்.. சூப்பர் ஸ்டாரிடம் கெஞ்சிய நெல்சன் திலீப்குமார்?.. இப்படி நடந்திருக்கா?

சென்னை: கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதனையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்திலும், கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்திலும் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பற்றிய புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த கூலி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் ரஜினிகாந்த். ஏனெனில் கமலை வைத்து எப்படி ஒரு மெகா ஹிட்டை கொடுப்பாரோ அதேபோல் தனக்கும் ஒரு சம்பவம் செய்வார் என்றுதான் நினைத்தார். ஆனால் படம் ரிலீஸானதும் எல்லாமே தலை கீழாக போனது. ஏகப்பட்ட நட்சத்திரங்களை களமிறக்கியிருந்தாலும் படத்தின் கதையில் சரக்கு எதுவும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக வாரிவிட்டது. வசூலிலும் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை.

ஜெயிலர் 2வில் கவனம்: கூலி ரிசல்ட் அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த ஏமாற்றத்தை ஜெயிலர் 2வில் சரி செய்யலாம் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் ரஜினி. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதில் வித்யா பாலன், பாலய்யா என பலர் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதன் முதல் பாக ரிசல்ட் சூப்பர் பாசிட்டிவ்வாக அமைந்ததால் இதன் மீதும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. தற்போது கோவாவில் முகாமிட்டிருக்கிறது படக்குழு.

Rajinikanth to Join Kamal Haasan for a New Film After Jailer 2 Here are New Unknown Details
Photo Credit:

கடைசி படமா?: ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு அவர் சுந்தர். சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக பேசப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கமலின் பிறந்தநாளன்று வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியும் சுந்தரும் சேர்ந்து அருணாச்சலம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதேசமயம் இதுதான் ரஜினியின் கடைசி படம் என்றும் பலர் பேசிக்கொள்கிறார்கள்.

கமலுடன் இணையும் படம்: இதற்கிடையே பல வருடங்கள் கழித்து கமலுடன் இணைந்து நடிக்கவும் ரஜினி முடிவெடுத்திருக்கிறார். இதை இரண்டு பேரும் உறுதி செய்திருக்கிறார்கள். இதனை முதலில் லோகேஷ் இயக்கவிருந்ததாகவும்; கூலி கொடுத்த அடியால் அவரை தூக்கிவிட்டு நெல்சன் திலீப்குமாரை ரஜினி ஃபிக்ஸ் செய்துவிட்டார்; அதற்கு கமலும் ஓகே சொல்லிவிட்டார் எனவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

கெஞ்சிய நெல்சன் திலீப்குமார்?: இந்நிலையில் அந்தப் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது சுந்தர்.சி படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும்போதே கமலுடன் இணையும் படத்தின் அறிவிப்பையும் வெளியிடலாம் என முடிவெடுத்ததாகவும்; ஆனால் நெல்சனோ ஜெயிலர் 2 படம் வந்த பிறகு அறிவிக்கலாம் என கெஞ்சி கேட்ட பிறகுதான் அந்த முடிவிலிருந்து சூப்பர் ஸ்டார் பினவாங்கியிருப்பதாகவும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X