twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா?

    |

    சென்னை: ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கூறி 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சி தொடங்கினார்.

    Recommended Video

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தா.. திருப்பம் வருமா? வராதா?

    அதன் பிறகு அரசியல் பேசி வந்தாலும் தேர்தலில் நிற்க போவதை பற்றி சரியான முடிவை வெளியிடாமல் இருந்தார்.

    இதையடுத்து இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பல கேள்விகளை கேட்டார். இறுதியாக நல்ல முடிவு கிடைக்கும் என்று ரசிகர்களும் தொண்டர்களும் காத்திருந்தனர்.

    கூட்டணி இருக்குமா?

    கூட்டணி இருக்குமா?

    இன்று அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் 2021 தேர்தலை பற்றிய செய்தியாகேவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய சக நண்பரான கமல்ஹாசனும் 2021 தேர்தலை எதிர் கொண்டு காத்திருக்கும் நிலையில் அவருடன் கூட்டணி வைப்பாரா? அல்லது முன்னர் செய்திகள் வெளியானது போல பி.ஜே.பி உடன் கூட்டணி வைப்பாரா என்பதை பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.

    மக்களியிடையே எடுபடுமா?

    மக்களியிடையே எடுபடுமா?

    ரஜினிகாந்த் படங்களில் அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பிடிப்பது சகஜமான ஒன்று தான். எடுத்துக்காட்டாக எஜமான் திரைப்படத்தில் நடிகை மீனாவுக்காக பட்டாம்பூச்சி புடிக்க செல்லும் போது அந்த காட்சியில் வரும் இயக்குனர் "அவரு யாரு.. அவரு நெனச்சா எதை வேணும்னாலும் புடிப்பாரு டா அந்த பூச்சிய புடிக்க மாட்டாரா என்ன" என்று ஒரு வசனம் கூறுவார்.

    என்ன கட்சி நம்ம கட்சி

    என்ன கட்சி நம்ம கட்சி

    அது போல முத்து படத்தில் "நான் எப்போ வருவேன் எப்டி வருவேணு யாருக்கும் தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்" வசனமும் அதே படத்தில் குலுவாலிலே பாடலில் "என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு" என்ற பாடல் வரிகளும் அந்த நேரத்தில் அப்போது மிகவும் பிரபலமடைந்தது. இருந்தாலும் அது அவரின் அரசியல் வாழ்க்கையில் எந்த வகையில் கை கொடுக்கும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    முடிவு தெரியுமா

    முடிவு தெரியுமா

    அவர் கட்சி தொடங்கியதிலிருந்து தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியது. சட்டமன்ற தேர்தல் பற்றிய முடிவை இன்றாவது தலைவர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

    இதான் காரணம்

    இதான் காரணம்

    ரஜினி ஆன்மிகத்தின் மீது நிறைய பற்று கொண்டவர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நவம்பர் 30 ஆன இன்று பாபாஜியின் பிறந்தநாள். தனது மன்றத்தின் கொடியில் பாபாவின் முத்திரையை வைத்திருக்கும் ரஜினி பாபாவின் பிறந்தநாளான இன்று அவரின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான முடிவை அறிவிக்க இதுதான் காரணம்.

    English summary
    RajiniKanth to meet Party Leaders today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X