எங்க வீட்டோட நிலைமையை பாருங்க.. ரஜினிகாந்த் முதல் ரத்னகுமார் வரை மழையால் பாதித்த பிரபலங்கள்!

சென்னை: செங்குன்றத்தை அடுத்த சோழவரத்தில் தான் இந்த முறை அதிகளவில் 300 மி.மீ., மழைப் பொழிவு இருந்துள்ளது. ரெட் ஹில்ஸில் 279 மி.மீ., மழை பதிவான நிலையில், தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து அருவி போல மழைநீர் ஓடும் வீடியோ காட்சிகளையும் தேசிய நெடுஞ்சாலையின் நிலைமையையும் இயக்குநர் ரத்னகுமார் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு இருக்கும் போயஸ் கார்டனையும் சுற்றி மழை நீர் வடியாமல் இருந்த காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

chennai rains rajinikanth ratnakumar

சென்னைக்கு ரெட் அலர்ட் 16ம் தேதியான இன்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே மழை கொட்டித் தீர்த்து விட்டது. வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினத்தையே ரெட் அலர்ட்டாக பின்னர் மாற்றி அறிவித்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்ந்த கனமழை காரணமாக பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரெட் அலர்ட்: தமிழ்நாட்டில் பொதுவாகவே நவம்பர் அல்லது டிசம்பரில் தான் இப்படி மழை வெளுத்து வாங்கும். ஆனால், இந்த முறை ஆயுத பூஜை முடிந்தவுடனே மழை பெரிய பூஜையை போட்டு விட்டது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. மேம்பாலங்கள் எல்லாம் பார்க்கிங் ஏரியாவாக மாறிய நிலையில், நேற்று முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் விடாது தொடர் மழை பெய்தது.

ரஜினிகாந்த் வீட்டருகே வெள்ளம்: போயஸ் கார்டனையும் இந்த மழை விட்டு வைக்காமல் புரட்டிப் போட்டிருக்கிறது. ரஜினிகாந்த் வீட்டருகே உள்ள சாலையில் அதிகப்படியான நீர் தேங்கியிருப்பதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சென்னை மாநகராட்சி அதை அகற்றும் பணியில் உடனே ஈடுபட்டு சரிசெய்து விட்டதாக விளக்கமளித்துள்ளனர்.

ரத்னகுமார் வீட்டின் நிலைமை: மேயாத மான், ஆடை, குளு குளு படங்களை இயக்கிய ரத்னகுமார். தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களுக்கு கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் வேலை பார்த்துள்ளார். ரெட் ஹில்ஸில் ரத்னகுமாரின் வீடு உள்ள நிலையில், தனது வீட்டிற்குள் மழை வெள்ளம் வந்து விட்டதாகவும் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையின் நிலைமை பாருங்க எந்தளவுக்கு மழை வெள்ளம் தேங்கியிருக்கு என வீடியோக்களை வெளியிட்டுள்ளார் ரத்னகுமார். 279 மி.மீ., மழை பெய்த நிலையில், என்னோட வீட்டின் நிலைமை இதுதான் என வீடியோ வெளியிட்டு புலம்பியுள்ளார். நடிகர் ஸ்ரீமான் தனது வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கே புறப்பட்டுச் சென்று விட்டார். மேலும், சில பிரபலங்களும் இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

வேட்டையன் படத்துக்கு பாராட்டு: லியோ வெற்றி விழாவில் என்ன தான் கழுகு வானத்துல பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகவேண்டும் என விஜய்க்கு சப்போர்ட்டாக ரத்னகுமார் பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களை கடுப்பாக்கியது. அதன் காரணமாகவே கூலி படத்தில் ரத்னகுமார் பணியாற்றவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை பார்த்த ரத்னகுமார் படம் சூப்பராக இருக்கு என்றும் ரஜினிகாந்தை வைத்து கமர்ஷியல் மற்றும் கன்டென்ட் படத்தை ஞானவேல் சிறப்பாக எடுத்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவருக்கும் உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் என பாராட்டியிருந்தார்.

ரஜினி ரசிகர்கள் கோபம்: முன்னதாக வேட்டையன் படம் வெளியான அக்டோபர் 10ம் தேதி World Mental Health Dayவுக்கு ரத்னகுமார் ட்வீட் போட்டது ரஜினிகாந்த் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது வேட்டையன் பாராட்டிலும் உள்குத்து இருப்பதாக தலைவர் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X