நன்சக் பயன்படுத்த ரஜினி 50 நாட்கள் பயிற்சி எடுத்தார்னு தெரியுமோ? #Petta
சென்னை: பேட்ட படத்திற்காக நன்சக் பயன்படுத்த 50 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் ரஜினிகாந்த்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் வெற்றி அடைந்துள்ளது. ஒரு சண்டை காட்சியின் போது ரஜினிகாந்த் நன்சக் பயன்படுத்தியிருந்தார்.
அது குறித்து பேட்ட ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார்.

ரஜினி
ரஜினி பேட்ட படத்தில் நன்சக்கை சும்மா எல்லாம் பயன்படுத்தவில்லையாம். 50 நாட்கள் பயிற்சி எடுத்து பயன்படுத்தியிருக்கிறார். அந்த காட்சி பக்காவாக வர வேண்டும் என்பதற்காக ரஜினி மெனக்கெட்டார் என்று பீட்டர் ஹெயின் தெரிவித்துள்ளார்.

உழைப்பு
தான் பெரிய நடிகர் என்று இல்லாமல் ஒரு சிறிய காட்சியாக இருந்தாலும் சிறப்பாக வர வேண்டும் என்று மெனக்கெடுபவர் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் அந்த நன்சக் காட்சிக்காக 50 நாட்கள் பயிற்சி எடுத்தது எல்லாம் ஒன்றுமே இல்லை.

மலேசியா
பேட்ட படம் ரிலீஸான 11 நாட்களில் சிங்கப்பூரில் ரூ. 6.38 கோடியும், மலேசியாவில் ரூ. 12.52 கோடியும், இலங்கையில் ரூ. 3.02 கோடியும் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

கிங்
பேட்ட படம் ரிலீஸானதில் இருந்து சென்னை பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் உள்ளது. 13 நாட்களில் பேட்ட படம் சென்னையில் மட்டும் ரூ. 12.50 கோடி வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











