twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள் #Rajinikanth

    |

    சென்னை: இந்திய அரசின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

     கங்கணா ரணவத்தின் தலைவி… முதல் பாடல் நாளை ரிலீஸ் ! கங்கணா ரணவத்தின் தலைவி… முதல் பாடல் நாளை ரிலீஸ் !

    நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து #Rajinikanth என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

    கண்டக்டர் சிவாஜி ராவில் இருந்து சூப்பர்ஸ்டார் ரஜினியாக மாறி தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசிய சினிமாவிலும் சூப்பர்ஸ்டாராகவே திகழ்கிறார் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த் ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

    தாதாசாகேப் பால்கே விருது

    தாதாசாகேப் பால்கே விருது

    இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படுகிறது தாதாசாகேப் பால்கே விருது. தேசிய விருதுகள் வழங்கப்படும் நாளிலேயே வாழ்நாள் சாதனையாளருக்கு இந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும். கடந்த 2019ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாதாசாகேப் விருது வென்றவர்கள்

    தாதாசாகேப் விருது வென்றவர்கள்

    1969ம் ஆண்டு இந்தி நடிகை தேவிகா ராணிக்குத் தான் முதன்முறையாக தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் முதன் முதலாக ஆன்ஸ்க்ரீனில் முத்தம் கொடுத்து நடித்த நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்.வி. பிரசாத், சத்யஜித் ரே, லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் என பல சினிமா ஜாம்பவான்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டுக்கான விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தெறிக்கும் டிரெண்டிங்

    தெறிக்கும் டிரெண்டிங்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தின் அப்டேட் வந்தாலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளுடன் இந்தியளவில் டிரெண்டாவது வழக்கம். இப்படி ஒரு உயரிய விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? சும்மா அதிருதுல்ல என்கிற ரேஞ்சுக்கு #Rajinikanth ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    விருது வழங்கும் நாள்

    விருது வழங்கும் நாள்

    வரும் மே 3ம் தேதி தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    #Rajinikanth trending in Twitter after the Dadasaheb Phalkhe Award announcement. Many more celebrities and fans send wishes to Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X