twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு இலவச பயிற்சிக்காக இணையதளம்.. ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக ஏழை மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினி காந்த் பத்ம விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    ப்ளீஸ்.. டோரா திறங்க நான் வெளியில போறேன்…பிரியங்காவால் கடுப்பான நிரூப் !ப்ளீஸ்.. டோரா திறங்க நான் வெளியில போறேன்…பிரியங்காவால் கடுப்பான நிரூப் !

    சமீபத்தில் திரைத்துறையில் அவரத சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது.

    ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி

    ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி

    இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி அளித்து தயார்படுத்தும் என ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கடந்த 14 ஆம் தேதி தெரிவித்தார்.

    இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி

    இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி

    இந்த திட்டத்தை வழக்கறிஞர் எம்.சத்ய குமார் நிர்வகிப்பார் என்றும், ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான https://rajinikanthfoundation.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    இணைய தளம் தொடக்கம்

    இணைய தளம் தொடக்கம்

    இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்காக https://t.co/Kjc1Dzv2Wf என்ற இணைய தளம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவியல் மனப்பான்மை

    அறிவியல் மனப்பான்மை

    இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

    ஆரம்ப முயற்சிகள்

    ஆரம்ப முயற்சிகள்

    எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.

    சூப்பர் 100 பிரிவு

    சூப்பர் 100 பிரிவு

    நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பதிவு செய்ய http://rajinikanthfoundation.or/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின்தொடரவும்.. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English summary
    Rajinikanth trust has started a website to couch for TNPSC group exams. Rajinikanth trust has released the press release. people can register in this website, http://rajinikanthfoundation.or/tnpsc.html
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X