தமிழில் நல்ல படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் ரஜினி பார்க்கும் 3 பழைய படங்கள்... என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை மனதார வாழ்த்துபவர். ஒரு திரைப்படம் நல்ல விமர்சனங்களோடு வெற்றிகரமாக ஓடினால், அதன் குழுவை அழைத்து அவர் பாராட்டுவது அனைவருக்கும் தெரிந்ததே.

அப்படி அவர் பாராட்டிய பல படங்களுள் வரலாறு, வெண்ணிலா கபடிக் குழு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற சில படங்கள் குறிப்பிடத்தக்கவை.

அப்படிப்பட்ட ரஜினிகாந்த் அவர்களுக்கு நிறைய படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளதாம். தமிழ் சினிமாவில், சில சமயம் நல்ல படங்கள் எதுவும் வராத சூழ்நிலையில், ரஜினி மூன்று பழைய படங்களை மட்டும் விரும்பிப் பார்ப்பாராம்.

ராஜ் கமல் இண்டர்நேஷனல்

ராஜ் கமல் இண்டர்நேஷனல்

நடிகர் கமல் "ராஜ்கமல் இண்டர்நேஷனல்" நிறுவனத்தை தோற்றுவித்து "ராஜபார்வை" படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயம், சிவாஜி கணேசன் அவர்கள் ரஜினிகாந்திற்கு ஃபோன் போட்டு,"உன் நண்பன் ஏன் இப்படி செய்கிறான். முதல் படத்தை தயாரிக்கும்போது கண்ணு தெரியாமல் நடிப்பதெல்லாம் அபசகுனம். அவனிடம் எடுத்துச் சொல்" என்று கூறியுள்ளாராம். அதற்கு,"நான் எப்படி சொல்வது, நீங்கள் சொன்னால்தான் கேட்பார்" என்று ரஜினி பதிலளித்துள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்

அபூர்வ சகோதரர்கள்

அதே ராஜ்கமல் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெளியானபோது, ஊரே கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாராம். அதனால் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று இரவு 11 மணி காட்சி ஒன்றை பார்த்துவிட்டு தன் மனைவி லதாவிடம், இப்போதே போய் கமலை சந்திக்க வேண்டும் என்று இரவு 2.30 மணிக்கு கூறியுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த கமலை எழுப்பி, அவரை கட்டியணைத்து,"உங்களுக்கு மரணமே இல்லை" என்று ரஜினி பாராட்டியுள்ளார்.

ஹே ராம் பார்த்தது 30, 40 முறை

ஹே ராம் பார்த்தது 30, 40 முறை

நல்ல படங்கள் வெளிவராத காலக் கட்டத்தில், தான் ஆங்கிலப் படமான காட் ஃபாதெர், சிவாஜி நடித்த திருவிளையாடல் மற்றும் கமல் தயாரித்து, இயக்கி, நடித்த ஹே ராம் ஆகிய மூன்று படங்களைத்தான் திரும்ப திரும்ப போட்டு பார்ப்பேன் என்றும், குறிப்பாக ஹே ராம் திரைப்படத்தை 30, 40 முறை பார்த்துவிட்டதாகவும், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புது புது விஷயங்கள் தான் அறிந்து கொண்டதாகவும், அந்தப் படம் பார்ப்பதே ஒரு தவம் என்றும் ரஜினி ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Recommended Video

Chandramukhi 2 | சந்திரமுகியாக நடிப்பது யார் தெரியுமா ? | Raghava Lawrence *Kollywood
விக்ரம்

விக்ரம்

ராஜ் கமல் தயாரித்த படங்கள் எப்போதுமே டிரெண்ட் செட்டிங் செய்யக் கூடியவை. இப்போது சமீபத்தில் வெளி வந்த விக்ரம் திரைப்படமே இன்றைய தலைமுறையினருக்கு சாட்சி. ரஜினி வியந்து பார்ப்பதாக சொன்ன ஹே ராம் படம் இந்தியாவால் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X