Rajini: வேட்டையன் VS கோட்.. முதல் நாள் வித்தியாசத்தை மட்டும் பாருங்க!
சென்னை: ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வரும் நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த வசூலை தளபதி ரசிகர்கள் சிலர் கோட் பட வசூலுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்' ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. அதுமட்டுமில்லாமல், அனிருத் இசையில் 'மனசிலாயோ' மற்றும் படத்தின் டீசர் படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகரித்தது.

படத்தின் கதை: தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை. துஷாரா விஜயன் சென்னையில் ஒரு வேலை வருகிறார். அப்படி வந்த இடத்தில், அசல் கோளாரால் கொலை செய்யப்பட, ரஜினி, அசல் கோளாரை என்கவுண்டர் செய்யப்படுகிறார். பின் அவன் நல்லவன் என்பது தெரியவர, துஷாராவை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை. நேற்று வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல், உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோட் முதல் நாள் வசூல்: இதனை தளபதி ரசிகர்கள் கோட் படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர். விஜய் நடித்த கோட் திரைப்படம், செப்டம்பர் 5ந் தேதி வெளியானது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இந்த படத்தில், ஏராளமான சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ஏஐ டெக்னாலஜி மூலம் விஜய்யின் இளம் வயது தோற்றத்தில் தோன்றி இருந்தார். அதுமட்டுமில்லாமல், விஜயகாந்திற்க்கு ஏஐ டெக்னாலஜி மூலம் உயிர் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. அதே போல், செந்தூரப்பாண்டி படத்திற்கு பின் விஜயகாந்த் மற்றும் விஜய் மீண்டும் ஒரே படத்தில் பார்க்க முடிந்தது. இப்படம், முதல் நாளில், சுமார் 126 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முதல் நாள் வித்தியாசம்: தளபதியின் கோட் படம் முதலில் நாளில் 126 கோடியை வசூலித்த நிலையில்,நேற்று வெளியான ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 72 கோடியை வசூலித்துள்ளது. இது கிட்டத்தட்ட 54 கோடி குறைவாகும். ஆனால், வேட்டையன் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து இருப்பதாலும், தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை இருப்பதாலும், படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது கோட் படத்துடன் ஒப்பிடும் போது பாதிக்கு பாதிதான் என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். இதே போலத்தான் நேற்று விஜய் ரசிகர்கள், வேட்டையன் படம் நன்றாகவே இல்லை என்று நெகட்டிவ் விமர்சனத்தை பரப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











