இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது...ஃபோனில் வாழ்த்திய ரஜினி, விஜய், அஜித்
சென்னை : 2019 ம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 22 ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் கோலிவுட்டை சேர்ந்த நடிகர் தனுஷ் உள்ளிட்ட 6 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது. விருது பெற்றவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் டி.இமானுக்கு ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் தனிப்பட்ட முறையில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இவர்கள் 3 பேரும் தன்னை ஃபோனில் அழைத்து வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சி என இமான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தனது திரையுலக இசை பயணத்தை தொடங்கியதையும் இமான் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களிகளிடம் இருந்து கிடைத்த வாழ்த்தினை சிறப்பானதாகவும், அங்கீகாரமாகவும் கருதுவதாக இமான் குறிப்பிட்டுள்ளார். அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்காக தான் இமானுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கும் இமான் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக மறைந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இமான் இசையில் ஓப்பனிங் பாடல் ஒன்றை பாடி உள்ளார். இது தான் எஸ்பிபி கடைசியாக பாடிய பாடல்.


Click it and Unblock the Notifications











