Rajini: சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முடிவு... ஜெயிலர் ஆடியோ விழாவில் விஜய்... ரஜினி போடும் கணக்கு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது.

நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

அந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 Rajinikanth: Vijay will attend the audio launch of Rajinikanths Jailer

ரஜினியுடன் இணையும் விஜய்: கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்ணாத்த தோல்வியில் இருந்து மீள்வதற்காக ஜெயிலர் படத்தை அதிகம் நம்பியுள்ளார் ரஜினி. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயிலர் ரிலீஸ் தேதி அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. அதேநேரம் இந்த அப்டேட்டுடன் படக்குழு வெளியிட்ட மினி டீசர் செம்ம வைரலானது. அதனால் ஜெயிலர் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் ஜெயிலர் படக்குழுவினருடன் ஏராளமான திரை பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Rajinikanth: Vijay will attend the audio launch of Rajinikanths Jailer

விஜய் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரில் படங்கள் நடித்து வருகிறார். அதனால் அவர் மூலமாகவே விஜய்யை நிகழ்ச்சிக்கு வரவைக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். அதுமட்டும் இல்லாமல் வாரிசு இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கச்சேரியை ஆரம்பித்துவிட்டிருந்தார் சரத்குமார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற இந்த விவாதம், பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் போல ஒரு ரவுண்டு அடித்துவிட்டு இறுதியாக ரஜினியிடமே தஞ்சம் அடைந்தது.

அதனால், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்துக்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் என ரஜினி நினைக்கிறாரோ என்னவோ. விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைத்துவந்து, அவர் மேடையில் இருக்கும் போதே தனது வெயிட்டை காட்ட நினைக்கிறாராம். அதேநேரம், ரஜினிக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தில் எல்லாம் பெரிய ஆசை கிடையாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வது குறித்து இன்னும் அபிஸிலாக அப்டேட் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X