Rajinikanth Vijayakanth: ரஜினியும் விஜயகாந்தும் இவ்ளோ நெருங்கிய நண்பர்களா..? தீயாக பரவும் போட்டோஸ்
சென்னை: விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வேட்டையன் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், கேப்டன் குறித்து ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். இந்நிலையில் அன்றுமுதல் இன்றுவரை ரஜினிகாந்தும் விஜயகாந்தும் எடுத்துக்கொண்ட சில க்ளாஸிக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ட்ரெண்டாகும் ரஜினிகாந்த் விஜயகாந்த் புகைப்படங்கள்
நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் 29ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், இளையராஜா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி, ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை திரும்பினார். மேலும், விஜயகாந்த் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசிய அவர், கண்ணீர் மல்க கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார். ரஜினியும் விஜயகாந்தும் இதுவரை இணைந்து படங்களில் நடித்தது இல்லையென்றாலும் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.
ரஜினிகாந்த், விஜயகாந்த் என இருவரது பெயரையும் வைத்து இவர்கள் அண்ணன், தம்பியாக இருக்கலாம் என 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் நினைத்தது உண்டு. அதேபோல் ரஜினிக்குப் போட்டியாக தான் விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என கேப்டன் மாற்றிக் கொண்டதாகவும் நம்பினர். ஆனால், இந்த கற்பனைகளுக்குள் எல்லாம் அகப்படாத பிம்பங்களாக ரஜினியும் விஜயகாந்தும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர் என்பதே உண்மை.
முக்கியமாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விஜயகாந்தும் தன்னுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் ரஜினிகாந்த். அதேபோல் முரட்டுக் காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தவர் கேப்டன் விஜயகாந்த். ஆனாலும் படப்பிடிப்புத் தளங்களிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிலோ பார்த்தால் ரஜினியும் விஜயகாந்தும் அந்த இடமே கலகலப்பாக மாறிவிடுமாம்.
இந்நிலையில், அன்று முதல் இன்று வரை ரஜினிகாந்தும் விஜயகாந்தும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் விஜயகாந்த் தோளில் கை போட்டபடி ரஜினி இருக்கும் போட்டோ பலரும பார்த்தது தான். ஆனால் விஜயகாந்துக்கு சிகரெட் பற்ற வைக்கிறார் ரஜினி, இது ரொம்பவே அரிதான புகைப்படம் என சொல்லப்படுகிறது. இதேபோல், கடைசியாக விஜயகாந்தை ரஜினி அவரது வீட்டில் சென்ற சந்தித்து நலம் விசாரித்ததும் ரசிகர்களை நெகிழச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











