Rajini in Ayodhya - அயோத்தியில் தரிசனம் என் அதிர்ஷ்டம்.. அரசியல் சந்திப்பு ஓவர் ஆன்மீக டூர் ஆரம்பித்த ரஜினி
அயோத்தி: Rajini in Ayodhya (அயோத்தியாவில் ரஜினிகாந்த்) இமயமலை பயணத்தை முடித்திருக்கும் ரஜினி அடுத்தடுத்து நடத்திய அரசியல் சந்திப்புகளை தொடர்ந்து அயோத்தியில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த்துக்கு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வெற்றியை ஈட்டி தந்திருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்த சூழலில் படம் வெளியாகி ஹிட்டடித்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர். மேலும் இனி ரஜினிகாந்த்தின் ஹிட் லிஸ்ட் வரிசையாக நீண்டுகொண்டே செல்லும் என்ற நம்பிக்கையிலும் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்.

இமயமலை பயணம்: ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் இமயமலை சென்றார். பாபா ஜி குகையில் தியானம், ஆன்மீக தலங்களின் விசிட்டுக்கு பிறகு நேற்றிலிருந்து அரசியல் தலங்களுக்கு விசிட் அடித்துவருகிறார். அந்தவகையில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தார். உ.பி துணை முதலமைச்சருடன் ஜெயிலர் படத்தையும் லக்னோவில் பார்த்தார்.
காலில் விழுந்த தலைவர்: அவரது அரசியல் ரீதியான சந்திப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம் என ஆரம்பத்தில் கடந்து சென்றவர்கள் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஜினியின் ரசிகர்களில் பெரும்பாலானோர் இதற்கு கண்டனம் தெரிவித்து இதெல்லாம் தேவையில்லாத வேலை என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். நேற்றிலிருந்து இந்த விஷயம்தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஏன் காலில் விழுந்தார்?: யோகியின் காலில் ரஜினி விழுந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும்; ரஜினிகாந்த் இப்படி செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் யோகியை ஒரு துறவியாக பார்க்கிறார். ஏனெனில் ஆன்மீக அரசியல் செய்வேன் என்று சொன்னவர்தான் ரஜினிகாந்த். அதனால் அவர் காலில் விழுந்ததை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை ஒரு தரப்பினர் சப்போர்ட்டும் செய்துவருகின்றனர்.
ராமர் கோயில்: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தச் சூழலில் அயோத்தியில் இருக்கும் ஹனுமன்கர்ஹி கோயிலில் வழிபாடு நடத்தினார் ரஜினிகாந்த். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் சென்றார். வழிபாட்டினை முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "அயோத்தி அனுமன் கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு வழிபாடு செய்தது எனது அதிர்ஷ்டம்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











