Rajinikanth - பழசை மறக்காத தலைவர்.. நடத்துனராக பணியாற்றிய பஸ் டெப்போவை சுற்றிப்பார்த்த ரஜினிகாந்த்

பெங்களூர்: Rajinikanth visited Bangalore Jayanagar bus depot (ஜெயாநகர் பஸ் டெப்போவுக்கு சென்ற ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் தான் நடத்துனராக பணியாற்றிய பெங்களூர் ஜெயநகர் பிஎம்டிசி பஸ் டெப்போவுக்கு சென்று பழைய நாட்களை நினைவுகூர்ந்தார்.

பெங்களூரில் நடத்துனராக பணியாற்றிக்கொண்டிருந்தவர் ரஜினிகாந்த். நடத்துனராக இருக்கும்போதே சில மேடை நாடகங்களிலும் தோன்றினார். அப்போது அவரது நடிப்பை பார்த்த பலரும் பாராட்டு தெரிவிக்க நடிகன் ஆனால் என்ன என்ற யோசனை ரஜினிக்கு வந்தது. அந்த யோசனை சரியானதுதான் என அவரது நண்பர் ராஜ் பகதூரும் தைரியம் கொடுக்க சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்தார். பிறகு நடிப்பை கற்றுக்கொண்டு கே.பாலசந்தர் மூலம் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.

 Rajinikanth visited Bangalore Jayanagar bus depot Video Goes Trend on Social Media

அவமானம்: சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும் பெரும் வெற்றி கண்டு சூப்பர் ஸ்டார் என்ற அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களாக வெற்றிக்கு ஏங்கிகொண்டிருந்த ரஜினிக்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் ஜெயிலர் வெற்றியின் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும் சிலாகிக்கின்றனர். படம் இதுவரை உலகளவில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.

தொடர் பயணம்: ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு சென்று வழிபாடுகளை முடித்த அவர் அடுத்ததாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், எம்.எல்.ஏ ஆகியோரை சந்தித்துவிட்டு அயோத்திக்கு சென்று ராமர் கோயில் கட்டுமான பணிகளை பார்வையிட்டுவிட்டு தமிழ்நாடு திரும்பினார்.

பெங்களூர் பயணம்: இந்நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் தான் நடத்துனராக பணியாற்றிய பெங்களூர் ஜெயநக பிஎம்டிசி பஸ் டெப்போவுக்கு இன்று காலை 11.30 மணிக்கு சென்றார். 11.45 மணிவரை அங்கு இருந்த அவர் டெப்போ ஊழியர்களுடன் கலந்துரையாடிவிட்டு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மேலும் தன்னுடைய பழைய நாட்களையும் அவர் நினைவுகூர்ந்தார். ரஜினி அங்கு சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X