»   »  அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?

அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு திடீர் என்று சென்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 ரஜினி

ரஜினி

கபாலி ஹிட் படத்தை அடுத்து ரஞ்சித், ரஜினி மீண்டும் இணையும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அனிருத்

அனிருத்

ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ள நிலையில் ரஜினி இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அப்போது அனிருத் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இசை

இசை

ரஜினி, ரஞ்சித் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ரஜினி அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு சென்றார் என்ற பேச்சும் உள்ளது.

தனுஷ்

தனுஷ்

ஒரு காலத்தில் ஓவர் நெருக்கமாக இருந்த தனுஷும், அனிருத்தும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இந்த படம் மூலம் அவர்கள் மீண்டும் சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

English summary
Superstar Rajinikanth has paid a surprise visit to music director Anirudh's studio.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil