திருப்பதிக்கு சென்ற ரஜினிகாந்த்.. அர்ச்சகருக்கு நேர்ந்த விபரீதம்.. அய்யோ பாவம்

சென்னை: ரஜினிகாந்த் நேற்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு விவிஐபிக்கள் முதல் சாதாரண ரசிகர்வரை பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். அவர் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று பிறந்தநாள் முடிந்த சூழலில் இன்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்த படமாகவும் அமைந்தது; மிகப்பெரிய தோல்வியை பார்த்த படமாகவும் அமைந்தது. கமலுக்கு லோகி கொடுத்த மெகா ஹிட் போல் தங்கள் தலைவருக்கும் கொடுப்பார் என்று ஆவலோடு இருந்த ரசிகர்களை எதையுமே பேசவிடாமல் ஆஃப் செய்துவிட்டார் இயக்குநர். எதுவுமே படத்தில் புதுமையாக இல்லாததால் அப்செட்டான அவர்கள் படத்தை வைத்து செய்துவிட்டார்கள்.

ஜெயிலர் 2வில் ரஜினி: கூலி படம் கொடுத்த அடியை தொடர்ந்து இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். தமிழ்நாடு, கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த இதன் ஷூட்டிங் இப்போது ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், பாலைய்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகமும் மெகா ஹிட்டாக வேண்டும் என படக்குழு தீவிரமாக உழைத்துவருகிறது.

Rajinikanth Visits Tirupati After 75th Birthday Celebrations Priest Injured Amid Heavy Crowd
Photo Credit:

தலைவர் 173: ஜெயிலர் 2வை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்கவிருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கமல் தயாரிக்க மட்டும் செய்வது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தாலும்; இதாவது நடக்கிறதே என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள். முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். அவர் வெளியேறியதை தொடர்ந்து புதிய இயக்குநரை தேடும் பணி தொடங்கியது. அநேகமாக பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் அப்படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் 75: இப்படி இந்த வயதிலும் பிஸியாக நடித்துவரும் ரஜினிகாந்த் நேற்று தனது75ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடினார்கள் ரசிகர்கள். கூடுதல் கொண்டாட்டமாக படையப்பா படம் 25 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸும் ஆனது. ரஜினியின் 75ஆவது பிறந்தநாள், திரைத்துறையில் இந்த வருடத்தோடு 50 வருடங்களை நிறைவு செய்த ரஜினி, 25 வருடங்களுக்கு பிறகு படையப்பா ரீ ரிலீஸ் என தலைவர் ரசிகர்களுக்கு நேற்றைய நாள் முப்பெரும் விழாவாக அமைந்தது.

திருப்பதியில் தரிசனம்; அர்ச்சகருக்கு விபரீதம்: இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாள் முடிந்த சூழலில் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரஜினி. அப்போது அவரை அருகில் பார்ப்பதற்கு அர்ச்சகர் ஒருவர் முயன்றார். ஆனால் அளவுக்கு மீறி கூட்டம் சேர்ந்ததால் அந்த அர்ச்சகரால் அதில் சிக்கி பரிதாபமாக கீழே விழுந்தார். பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி ஆசுவாசப்படுத்தினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X