தேவுடா.. தேவுடா.. ஏழுமலை தேவுடா.. திருப்பதியில் மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

கடந்த டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியளவில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனித்தனியே குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

திருப்பதியில் ரஜினிகாந்த்

திருப்பதியில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு சென்றுள்ளர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது சொகுசு காரில் இருந்து இறங்கும் நடிகர் ரஜினிகாந்தை சூழ்ந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் செல்ஃபி எடுக்கும் வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.

லிஃப்டில் ஏறும் காட்சிகள்

லிஃப்டில் ஏறும் காட்சிகள்

திருப்பதியில் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவே அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் வெள்ளை உடை அணிந்திருந்தார். அவர் தேவஸ்தான நிர்வாகிகளுடன் லிஃப்டில் ஏறி தேவஸ்தான விடுதியில் தங்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளன. அந்த வீடியோவை ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

72வது பிறந்தநாள்

72வது பிறந்தநாள்

நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கடந்த டிசம்பர் 12ம் தேதி எளிமையான முறையில் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று அவர் வீட்டிலேயே இல்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், பிறந்தநாள் முடிந்து சில நாட்கள் ஆகி உள்ள நிலையில், தற்போது திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் சென்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் திருப்பதி செல்வது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன்

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளை முன்னிட்டு தனது மகன்களுடன் அப்பா ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

பாபா ரீ ரிலீஸ்

பாபா ரீ ரிலீஸ்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 10ம் தேதி வெளியான பாபா ரீ ரிலீஸ் திரைப்படம் இந்த வாரம் வெளியான மற்ற படங்களை விட சிறப்பாக தியேட்டர்களில் ஓடி வருவதாக ஏகப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

ஜெயிலர் வீடியோவுக்கு வரவேற்பு

ஜெயிலர் வீடியோவுக்கு வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் அறிமுக வீடியோ டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் பரிசாக வெளியானது. அந்த க்ளிம்ஸ் காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முத்துவேல் பாண்டியன் எனும் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X