Rajinikanth: திருவண்ணாமலையில் அண்ணாமலை ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் சாமி தரிசன புகைப்படம்!
சென்னை: திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
அரசியலிலேயே ஆன்மிகத்தை கொண்டு வர வேண்டும் என்கிற அளவுக்கு பக்தி நிறைந்த ஐடியாலஜியை கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்து வரும் ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், அதன் போட்டோ அதிகமாக ஷேர் ஆகி வருகிறது.

ஜெயிலருக்கு வெயிட்டிங்: தர்பார், அண்ணாத்த படங்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு ஹிட் கொடுக்காத நிலையில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள ஜெயிலர் படத்தின் மீது தான் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
விஜய்யின் பீஸ்ட் பட ட்ரோலுக்கு பதிலடி கொடுக்க ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் என நடிகர்கள் பட்டாளத்தையே வைத்து ஜெயிலர் படத்தை நெல்சன் உருவாக்கி வருகிறார்.
திருவண்ணாமலையில் லால் சலாம்: அந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் மும்பையில் சில நாட்கள் படமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் லால் சலாம் படக்குழுவினர் திருவண்ணாமலையில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவண்ணாமலையில் அண்ணாமலை: அண்ணாமலை படத்தில் நடித்த ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். டிசர்ட் அணிந்து கொண்டு ரஜினிகாந்த் கோயிலுக்கு சென்று வழிபட்ட நிலையில், அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது.
சிவா, நெற்றிக்கண், அண்ணாமலை, அருணாச்சலம், லிங்கா என பல படங்களில் சிவபெருமானின் டச் ரஜினி படங்களில் அதிகமாகவே நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், சமீப காலமாக அவருடன் மிகவும் நட்போடு பழகி வரும் ரஜினிகாந்தும் தற்போது திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











