Rajinikanth: ரஜினிகாந்த் படத்துக்கு பா. ரஞ்சித்தால் சிக்கலா?.. என்ன இப்படியொரு செக் வச்சுட்டாரே?

சென்னை: அயோத்தி ராமர் கோயிலுக்கு ரஜினிகாந்த் சென்றது அவர் விருப்பம் என்றாலும் அவர் பேசியதில் தனக்கு விமர்சனம் இருப்பதாக நேற்று நடந்த ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் பேசி ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கபாலி மற்றும் காலா படங்களை இயக்கும் வாய்ப்பை பா. ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் வழங்கிய நிலையில், நல்ல ஒரு நன்றிக் கடனை பா. ரஞ்சித் திருப்பி செலுத்தி விட்டார் என ரசிகர்கள் பதிவிட்டு விளாசி வருகின்றனர்.

ரஜினிகாந்துக்கு மட்டுமின்றி விரைவில் வெளியாக உள்ள ரஜினிகாந்தின் படத்திற்கும் பா. ரஞ்சித்தால் சிக்கல் ஏற்படுமோ என்கிற சந்தேகமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Rajinikanth vs Pa Ranjith clash: Blue Star and Lal Salaam have a same story line?

பா. ரஞ்சித் தயாரிப்பில்: இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அரக்கோணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கிரிக்கெட் விளையாட்டு தான் பிரதான கதையாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டு மூலமாக நடக்கும் ஜாதிச் சண்டையை பேஸ் பண்ணி இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் படம்: மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 9-ம் தேதி அந்தப் படத்தில் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. லால்ஸ் எல்லாம் திரைப்படமும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட அரசியல் படமாகவே உருவாகி இருக்கிறது. ப்ளூ ஸ்டார் படத்தில் சாதிய அரசியல் என்றால் லால் சலாம் திரைப்படத்தில் மத அரசியல் கிரிக்கெட் விளையாட்டை வைத்து கதை கருவாக உருவாகி இருக்கிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்தாலும், லைகா நிறுவனமும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து இதனை சூப்பர் ஸ்டார் படமாகவே புரமோட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தும் ப்ளூ ஸ்டார்: கடந்த டிசம்பர் மாதமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் ஸலாம் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் மட்டுமே பொங்கல் வெளியீடாக வெளியாகின. பிப்ரவரி 9ம் தேதி தான் லால் சலாம் திரைப்படம் திரைக்கு வருகிறது. ஆனால், பா. ரஞ்சித் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஜனவரி 25ம் தேதியே திரைக்கு வருகிறது.

ரஜினி படத்துக்கு சிக்கல்: இரண்டு படங்களுமே கிரிக்கெட் மற்றும் அதை வைத்து நடத்தப்படும் அரசியல் படமாக உருவாகி உள்ள நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தை முதலில் ரசிகர்கள் பார்த்து விட்டால் அதே போல உருவாகி ரிலீஸ் ஆகவுள்ள லால் சலாம் படத்தை ரசிகர்கள் காண ஆர்வம் செலுத்துவார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருப்பதால் நிச்சயம் ரசிகர்கள் அந்த படத்துக்கு ஆதரவு தரவும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி பெறப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X