விஜய் முதல்வரானது பற்றி கேள்வி.. கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினி!

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நடிகரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் கடந்த மே 10ந் தேதி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா தமிழக அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து நேரடியாக அரசியலுக்குள் வந்து முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பதவியேற்ற மறுநாளே அரசியல் மரியாதை நிமித்தமாக பல முக்கிய தலைவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து வைகோ மற்றும் சீமான் ஆகியோர்களையும் சந்தித்து அரசியல் குறித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Super star Rajinikanth Vijay CM

முதல்வர் விஜய்: இந்நிலையில், முதல்வர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதற்கு காரணம், தமிழ் சினிமாவின் இரு பெரிய நட்சத்திரங்களாக கருதப்படும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையேயான உறவு குறித்து எப்போதும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, ரஜினிகாந்த் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பாரா அல்லது இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

ரஜினிகாந்தின் ரியாக்ஷன்: ஆனால் இதுவரை விஜய், ரஜினிகாந்தை நேரில் சந்திக்கவில்லை. இதனால் இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்திடம், விஜய் முதலமைச்சராக பதவியேற்றது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடி பதில் எதையும் அளிக்காத ரஜினிகாந்த், கையெடுத்து கும்பிட்டு புன்னகைத்தபடியே அங்கிருந்து நடந்து சென்றார். அவர் எந்த கருத்தும் கூறாமல் சென்றாலும், அவரது அந்த புன்னகையும் அமைதியான ரியாக்ஷனும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இதை மரியாதையான வாழ்த்தாக பார்க்க, மற்றொருபக்கம் ரஜினி ஏன் கருத்து சொல்ல தவிர்த்தார்? என்ற கேள்வியையும் இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X