கடைசி படத்திற்காக லோகேஷுக்கு ஸ்கெட்ச் போடும் ரஜினி... ஒர்க் அவுட் ஆகுமா LCU கான்செப்ட்..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.

லைகா தயாரிக்கவிருக்கும் லால் சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினியின் தலைவர் 171 படம் பற்றிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 படத்தை தசெ ஞானவேல் இயக்குவார் எனக் கூறப்படும் நிலையில், ரஜினியின் கடைசித் திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 விரைவில் ஜெயிலர் ரிலீஸ்

விரைவில் ஜெயிலர் ரிலீஸ்

ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு என பெரிய நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு முடிவுசெய்துள்ளதாம்.

 ரஜினியின் கடைசி ஆசை

ரஜினியின் கடைசி ஆசை

ஜெயிலர் ஷூட்டிங் முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்கிறார் ரஜினி. தலைவர் 171 என்ற டைட்டிலில் அப்டேட்டுக்காக காத்திருக்கும் இந்தப் படத்தை ஜெய்பீம் புகழ் தசெ ஞானவேல் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் கடைசித் திரைப்படம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.

 சம்மதம் சொல்வாரா லோகேஷ்

சம்மதம் சொல்வாரா லோகேஷ்

கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் ரஜினி. பாக்ஸ் ஆபிஸில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ள ரஜினிக்கு கடைசியாக ஒரு ப்ளாக் பஸ்டர் இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என ரொம்பவே ஆர்வமாக உள்ளார். அதனால் லோகேஷ் கனகராஜ் தனது கடைசி படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறாராம். கமலுக்கு விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்த லோகேஷ், இன்று மோஸ்ட் வாண்டட் டைரக்டராக மாறிவிட்டார்.

 காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்

காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்

இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ்ஜிடம் ரஜினியே பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், அந்தப் படமும் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே கூறியுள்ளாராம். தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்து கைதி, விக்ரம் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் டைரக்ட் பண்ண முடிவு செய்துள்ளார். முக்கியமாக கார்த்தியின் கைதி 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினியின் விருப்பத்துக்கு பதில் சொல்ல முடியாமல் லோகேஷ் திணறிபோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கமல் - லோகேஷ் கனகராஜ் காம்போ கொடுத்த சூப்பர் ஹிட் படமான விக்ரம், கோலிவுட்டில் தனி சிக்னேச்சரையே கிரியேட் செய்துள்ளது. இதனால் இதே கான்செப்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைந்தால் இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்தக் கூட்டணி குறித்து தகவல்கள் மட்டுமே பரவி வருகின்றன. ரஜினியின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் ஆசையும் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X