வில்லன் படத்தைப் பார்க்கவிரும்பும் சூப்பர்ஸ்டார்!
சென்னை : தமிழில் வெளியாகும் முக்கியமான படங்களை மட்டுமல்ல, பிறமொழிகளில் வெளியாகும் நல்ல படங்களையும், நண்பர்களின் படங்களையும் கூட ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் பாராட்டிவருவது வழக்கமான ஒன்று தான்.
அந்தவகையில் இந்தமுறை அவர் பார்க்க விரும்பும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மோகன்லால் நடிப்பில் வரும் அக்டோபர் 27-ம் தேதி வெளியாக இருக்கும் 'வில்லன்' திரைப்படம் தானாம்.
இந்தத் தகவலை படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனே வெளியிட்டுள்ளார். 'வில்லன்' படத்தை ரஜினிகாந்த் பார்க்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர்.

ரஜினி பார்க்க விருப்பம்
ரஜினி இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என விரும்புவதற்கு மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரும், நண்பருமான மோகன்லால் இந்தப் படத்தில் ஹீரோவாக இருப்பதே முக்கியக் காரணம். அதுதவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

மலையாளத்தில் விஷால்
இந்தப்படத்தின் மூலம் நடிகர் விஷால் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் நுழைந்துள்ளார். விஷால் நடிக்கும் இப்படத்தில் அப்படி என்ன கதை இருக்கும், இந்தப்படத்தில் என்ன சிறப்பு என அறியும் ஆவலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

லிங்கா தயாரிப்பாளர்
இந்தப்படத்தைத் தயாரித்துள்ளவர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ரஜினியை வைத்து 'லிங்கா' படத்தை தயாரித்த இவர், ரஜினியின் நண்பரும் கூட. ராக்லைன் வெங்கடேஷின் வேண்டுகோளும் கூட ரஜினி, இந்தப்படத்தை பார்க்க விரும்பியதற்கு ஒரு காரணம்.

மோகன்லால் படம்
இதேபோல கடந்த வருடம் மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படத்தை அதன் இயக்குனர் ப்ரியதர்ஷன், ரஜினிக்கு பிரத்யேகமாகத் திரையிட்டு காட்டினார். அந்தப் படத்தை ரசித்துப் பார்த்த ரஜினிகாந்த் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











