ரஜினி தவறவிட்ட மெகா ப்ளாக் பஸ்டர் சூர்யவம்சம்.. சூப்பர் ஸ்டார் இப்படி மிஸ் செஞ்சுட்டாரே.. காரணம் என்ன?
சென்னை:விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, சுந்தரராஜன், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் சூர்யவம்சம். கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்போதுவரை அந்தப் படம் பலரது ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்தப் படம் பற்றிய புதிய தகவல்களை திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் லெஜண்ட்ரி இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். அவர் இயக்குநராக அறிமுகமான புது வசந்தம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்தை தயாரித்திருந்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.அப்படம் மெகா ஹிட்டானதால் விக்ரமனுக்கும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் நல்ல புரிதல் உருவானது. இதனால் அடுத்தடுத்து அவரது இயக்கத்தில் படங்களை தயாரிக்க ஆர்.பி. சௌத்ரி ரொம்பவே விருப்பப்பட்டு அதன்படி செயல்படவும் செய்தார்.

சூர்யவம்சம்: அப்படி வந்ததுதான் சூர்யவம்சம் திரைப்படம். சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன், சுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அப்படம்; சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்த படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்டைம் ஃபேவரைட்: அந்தப் படத்தின் ஸ்பெஷலே விக்ரமனின் இயக்கமும், அவர் கதையை கொண்டு போன விதமும்தான். சாதாரண ஒன்லைனாக தெரிந்தாலும்; அவர் உருவாக்கிய ஒவ்வொரு சீனும் அனைவரையும் வசீகரித்தது. ஒரு பாடலில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற கான்செப்ட் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அதிலிருந்துதான் ஃபேமஸ் ஆகின. குடும்ப பாங்கான கதை என்பதால் தமிழ்நாட்டு குடும்பங்கள் இன்றளவும் அந்தப் படத்தை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: இந்நிலையில் அப்படத்தில் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி ஆசைப்பட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, "நான் இந்த அளவுக்கு இருக்கிறேன் என்றால் அதற்கு சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியும் ஒரு காரணம். அவர் ரஜினி, கமலை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லை. ஆனாலும் முன்னணி தயாரிப்பாளராகத்தான் இருந்தார்.
ரஜினியை நடிக்க வைக்க ஆசை: ஒருநாள் ரஜினி வீட்டிலிருந்து கிளம்பி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆஃபிஸுக்கு சென்றேன். அப்போது சௌத்ரி சார் என்னிடம், 'சூர்யவம்சம் என்று ஒரு கதை கேட்டேன். அதில் ரஜினி நடித்தால் சூப்பராக இருக்கும்' என கூறினார். நான் உடனே, 'இப்போது ரஜினி வீட்டிலிருந்துதான் வருகிறேன். நான் வேண்டுமானால் அவரிடம் சொல்லி பார்க்கிறேன்' என்று சொன்னேன். அவரும் சரி என்றுதான் சொன்னார். பிறகு அன்று மதியமே ரஜினி வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. வெளியே போய்விட்டார். இதை ஃபோனில் சௌத்ரியிடம் சொன்னேன். அவரோ, சரி விடுங்கள் ரஜினி நடித்தாலும் இந்தப் படம் ஹிட்தான். சரத்குமார் நடித்தாலும் இந்தப் படம் ஹிட்தான் என கூறினார்" என்றார்.


Click it and Unblock the Notifications
