Rajini Watched Leo - லியோ படத்தை தியேட்டரில் பார்த்தாரா ரஜினிகாந்த்?.. இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்
சென்னை: Rajini Watched Leo (லியோ படம் பார்த்த ரஜினி) விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையரங்கில் பார்த்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் இன்று வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கும் லியோவை கொண்டாடினர். அதிலும் முதல் காட்சியை விஜய் ரசிகர்கள் திருவிழாவாகவே மாற்றினர். காலையில் சீக்கிரமே திரையரங்குக்கு சென்று பட்டாசு வெடித்து, மேளதாளம் அடித்து அலப்பறையை கூட்டினர்.

விஜய் ரசிகர்களுக்கு ஓகே: படத்தை தளபதி ரசிகர்கள் லோகேஷும், விஜய்யும் எங்களை ஏமாற்றவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக விஜய் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட விஜய்யை ஸ்க்ரீனில் காட்டியதற்காகவே லோகேஷ் கனகராஜை கொண்டாடலாம். அதேபோல் லோகேஷின் மேக்கிங்கையும் பாராட்ட வேண்டும் என்கின்றனர்.
ஒர்த் இல்லை: அதேசமயம் படத்துக்கு கலவையான விமர்சனங்களை ரசிகர்களில் ஒரு தரப்பினர் கொடுத்துவருகின்றனர். விஜய் ரசிகர்கள் சொல்வதுபோல் படம் அவ்வளவு ஒர்த் இல்லை என்ற கமெண்ட்டை சமூக வலைதளங்களில் அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு விஜய் ரசிகர்களோ, லியோ படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்கிறார்கள் என பதிலடி கொடுத்துவருகின்றனர்.
முக்கியமான ரிசல்ட்: விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் ரிசல்ட் ரொம்பவே முக்கியமாக படுகிறது. ஏனெனில் சமீபகாலமாக ரஜினியா விஜய்யா என்ற போட்டி இரண்டு பேரின் ரசிகர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் செய்த வசூலை லியோ ஒரு வாரத்திற்குள்ளாகவே அடித்து காலி செய்துவிடும் என்று லியோ ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய் ரசிகர்கள் கூறினர். அதனால் இந்தப் படத்தின் வசூலை ரொம்பவே கூர்மையோடு நோக்கியிருக்கின்றனர்.

படம் பார்த்த ரஜினி?: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேரளாவில் இருக்கும் ஒரு திரையரங்கத்தில் லியோ படத்தை பார்த்ததாக புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் சிலர் இது ரஜினிகாந்த் இல்லை என்ற கருத்தை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் இப்போது ஞானவேலு இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதன் ஷூட்டிங் கேரளாவில் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார்.முன்னதாக லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











